TamilSaaga

ஊழலில் கறார் காட்டும் சிங்கப்பூர்… அசால்டா நினைத்து இந்திய ஊழியர்கள் வாங்கிய லஞ்சம்… கொத்தா தூக்கிய காவல்துறை… எடுங்க 14 லட்சம் அபராதம்!

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்திய ஊழியர்கள் செய்த செயலால் தற்போது 14 லட்சம் அபராதத்தினை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் லஞ்சம் என்பது அடிப்படையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது சட்டவிரோதம் என்றாலும் பலரும் இதை கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலை முடிந்தால் போதும் என்ற மனநிலையில் அதை கண்டுக்கொள்ளாமல் சென்று விடுகின்றனர். ஆனால் சிங்கப்பூரில் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்பதற்கு சமீபத்திய சம்பவம் ஒரு உதாரணமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் வேலைகள்… சிங்கப்பூரில் 2023ன் டாப் 15 jobs இது தான்.. தெரிஞ்சிக்கோங்க உங்க லைஃப் செட்டில் தான்!

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டது சென்னமேரா என்னும் உணவு நிறுவனம். இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த ரத்தினசவபதி supervisor ஆகவும், முரளிதரன் என்பவர் மேனஜராகவும் வேலை செய்து வந்தனர். கொரோனா காலத்தில் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த பல ஊழியர்கள் தங்கள் வேலை ஒப்பந்தத்தினை முறித்து கொண்டு கம்பெனியில் இருந்து வெளியேறி இருந்தனர்.

இதனால் கம்பெனியில் அதிக இடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடத்துக்கு நாங்கள் ஆட்களை கூட்டி வருகிறோம். வேறு யாரிடமும் விட்டு விட வேண்டாம் என இன்ஸ்பிரோ தரப்பில் கோரிக்கை வந்து இருக்கிறது. முதலில் இந்த கோரிக்கை நிலுவையில் தான் இருந்து இருக்கிறது.

ரத்தினசவபதி இன்ஸ்பிரோவின் இயக்குனர் ஹேமா சுதன் நாயரை அணுகி இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தினை உங்களுக்கு கொடுத்தால் 4.2 லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என டீல் பேசி இருக்கிறார். முதலில் தயங்கிய ஹேமா பின்னர் இதற்கு ஒப்புக்கொண்டு அந்த டீலுக்காக கேட்கப்பட்ட லஞ்சத்தினை கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் கால் டாக்ஸி ஓட்டுனாலே ராஜா தானோ! 7 நாளுக்கு 5000 சிங்கப்பூர் டாலர் சம்பாரிக்கும் ஓட்டுநர்… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த புகைப்படம்!

இந்த பணத்தினை வாங்கிக்கொண்டு ரத்தினசவபதி தன்னுடைய சக ஊழியரான முரளிதரனை அணுகி இந்த விஷயத்தினை கூறி இருக்கிறார். அவரும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன்னுடைய பங்காக 2.1 லட்சத்தினை வாங்கி கொண்டு டீலை முடித்து கொடுத்து இருக்கிறார்.

சிறிது நாட்கள் பிரச்னை இல்லாமல் சென்ற நிலையில், சென்னமேரா உணவு நிறுவனத்துக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் எழுந்தது. சம்மந்தப்பட்ட இந்த இரு ஊழியரையும் பணி நீக்கம் செய்து, உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது.

பல நாட்களாக நடந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரத்தினசவபதி மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் தலா 14 லட்ச ரூபாய் இந்திய மதிப்பில் அபராதம் கட்ட வேண்டும். அதுமட்டுமல்லாது, வாங்கிய லஞ்சம் 4.2 லட்சத்தினையும் சென்னமேரா நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஊழல் வழக்குகளில் அதிக கறார் காட்டும் என தெரிந்து லஞ்சம் வாங்கிய இந்தியர்கள் குறித்த முழு விபரமும் இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts