TamilSaaga

“சிங்கப்பூரில் கட்டுக்கட்டாக சிக்கிய வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்” : ஒரு வெளிநாட்டவர் உள்பட நான்கு பேர் கைது

சிங்கப்பூரில் லோயாங் டிரைவில் உள்ள தொழிற்துறை பிரிவில் 3,200க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 முதல் 49 வயதுடைய மூன்று சிங்கப்பூரர்கள் மற்றும் ஒரு மலேசியர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்கிழமை நடந்த நடவடிக்கையின் போது, ​​தொழில்துறை பிரிவை விட்டு வெளியேறிய பிறகு, சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வேனை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படியுங்கள் : என் மகள் அவளுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்? – ஒரு சிங்கப்பூர் தாயின் கண்ணீர்

“அதே நேரத்தில், தொழில்துறை பிரிவை ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர், அங்கு மற்றொரு ஆண், பெட்ஃப்ரேம்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை மீட்டு, அவற்றை கேன்வாஸ் பைகளில் அடைப்பதைக் கண்டார்” என்று சிங்கப்பூர் சுங்கத்துறை ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் Air Suvidha பற்றி உங்களுக்கு தெரியுமா?

சந்தேக நபர்களில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மற்ற இருவரிடம் விசாரணைகள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குதல், விற்றல், அனுப்புதல், விநியோகித்தல், சேமித்தல், வைத்திருத்தல் அல்லது கையாள்வது ஆகியவை சுங்கச் சட்டம் மற்றும் GST சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts