TamilSaaga

சிங்கை செல்ல skilled test அடிச்சிட்டு ரிசல்ட்காக வெயிட் பண்ணுறீங்களா? இல்ல அட்மிஷன் போட போறீங்களா? ஸ்டாப்… இந்த ரிஸ்க் இப்போ எடுக்காதீங்க!

சிங்கப்பூருக்கு செல்ல அதிக நபர்களால் பரிந்துரைக்கப்படுவது Skilled test தான். ஆனால் சமீபகாலமாக அதிலும் பல சிக்கல்கள் உருவாகி இருக்கும் நிலையில், புதிதாக டெஸ்ட் அடிக்க செல்பவர்கள் சில நிமிடம் வெயிட் செஞ்சு இத படிங்க. அப்புறம் உங்க முடிவுல கூட மாற்றம் ஏற்படலாம்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அங்கீகார இருக்கும் Skill இன்ஸ்ட்யூட்களில் அட்மிஷன் போட வேண்டும். 45 முதல் 60 நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட்டு மெயின் எக்ஸாம் நடத்துவார்கள். அதில் எழுத்து தேர்வு மற்றும் பிராக்டிக்கல் தேர்வு கூட இருக்கும். அதில் பாஸ் ஆனவர்கள் சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு வர முடியும். மற்ற பாஸ்களை விட அவர்களுக்கு பிடித்தம் என எதுவும் இருக்காது. தங்குமிடம் கம்பெனி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டு விடும். இந்த பாஸில் வருபவர்களுக்கு ஓவர் டைமும் அதிகமாக இருக்கும் என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு வர இதை மட்டும் செய்யாதீங்க… SPassல் இத தெரிஞ்சிக்காம சிங்கப்பூருக்கும் வராதீங்க.. இத படிங்க அப்புறம் எடுங்க முடிவ!

இதற்காக தமிழ்நாட்டில் நிறைய இன்ஸ்ட்யூட்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடம் ஸ்கில் முடித்த பலரும் பாஸ் ஆகிவிட்டாலும் சிங்கப்பூர் வராமல் இருந்ததால் குறிப்பிட்ட கோட்டாக்கள் நிரம்பியதாக கணக்கில் வந்தாலும் ஊழியர் யாரும் சிங்கப்பூர் வரவில்லை என்பது பெரிய பிரச்னை ஆனது. இந்த கணக்கு மட்டுமே பல ஆயிரத்தினை தாண்டும் எனக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் டெஸ்ட் அடித்தவர்கள் சிங்கப்பூரில் நுழையட்டும் அதன்பின் கோட்டா ரிலீஸ் செய்யலாம் என வாய் மொழி உத்தரவு வந்ததை அடுத்து skilled டெஸ்ட் அடிப்பதிலும் சிக்கல்கள் உருவானது. இந்த பிரச்னை Skill அடித்தவர்கள் சிங்கப்பூர் நுழையாததில் மட்டும் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது கொரோனா காலத்தில் ஏகப்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தினர்.

தற்போது நிலைமை மாறி வரும் நிலையில், அது பொருளாதார முன்னேற்றத்தில் பெரிய இடியாக இறங்கி இருக்கிறது. இதனால் தான் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் கூட தொடர்ந்து ஆட்குறையில் இறங்கி இருக்கிறது. இந்த கணக்கு 10, 100 என்று இல்லாமல் ஆயிரங்களில் இருக்கின்றது. இந்த பிரச்னை தான் சிங்கப்பூர் தொழில்துறையிலும் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் குடும்பத்துடன் பறக்க ஆசையா… அப்போ, Long term visit விசா வாங்கிடுங்க… என்னென்ன டாக்குமெண்ட்ஸ் வேணும் தெரிஞ்சிக்கணுமா?

இதனால் இன்னும் மார்ச் வரை இதே நிலைமை தான் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்கில் டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வருவதில் தொடர் சிக்கல்கள் தான் இருக்கும். இன்ஸ்ட்யூட்களில் கூட அக்டோபர் 7 வரை டெஸ்ட் அடித்தவர் ரிசல்ட் வந்து இருக்கிறது. 100 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்னும் ரிசல்ட் வராமல் பலரும் தவிப்பில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இன்னும் ரிசல்ட் வர நேரம் எடுக்கும் என்றே கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, அட்மிஷன் போட சென்றால் அட்மிஷனை முடித்து அனுப்பி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவே ரிலீஸ் ஆக நேரம் எடுக்கும் போது பயிற்சி கொடுத்தால் அது 60 நாட்களை தாண்டும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் பிரபல பெரிய இன்ஸ்ட்டியூகளில் மட்டுமே.

சின்ன இன்ஸ்ட்டியூகளுக்கு பெரிய இன்ஸ்ட்டியூகள் தான் கோட்டா கொடுத்து வந்தனர். வரும் கோட்டாவின் அளவே மிக குறைந்த அளவில் இருப்பதால் அதற்கு தற்போது இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. அதனால், skill டெஸ்ட்டிற்கு அட்மிஷன் போடும் எண்ணத்தில் இருப்பவர்கள். அந்த ஐடியாவை 3ல் இருந்து 4 மாதம் தள்ளி வைப்பதே நல்லது.

இருந்தும் சிங்கப்பூர் போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் படித்தவர்கள் SPassக்கு முயற்சி செய்து பார்க்கலாம். அதிலும் கோட்டா பிரச்னை இருப்பதால் அதற்கு நேரம் எடுக்கவே செய்யும். Skill அடித்தவர்கள் ரிசல்ட் வரும் வரை பொறுமை காப்பதே இப்போதைய ஒரு வழி. அது வந்தபிறகும் கூட நல்ல ஏஜென்ட்டினை பார்த்து கம்பெனி பார்க்க கூறுங்கள். அந்த கம்பெனி குறித்து விசாரித்த பிறகே IPA அப்ளே சொல்வதும் நல்லது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts