TamilSaaga

சிங்கப்பூரின் உற்பத்தி திறனில் வளர்ச்சி – ஜூன் மாதத்தில் 27.5 சதவிகிதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் இந்த ஆண்டு உற்பத்திஜூன் மாதத்தில் 27.5 சதவீத வேகத்தில் வளர்ந்துள்ளது. இது எலக்ட்ரானிக்ஸ், பயோமெடிக்கல் மற்றும் கெமிக்கல்ஸ் கிளஸ்டர்களால் உயர்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் சிங்கப்பூரில் பயோமெடிக்கல் உற்பத்தியைத் தவிர்த்து, ஜூன் மாதத்தில் உற்பத்தி 24.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பொருளாதார மேம்பாட்டு வாரியம் (ஈடிபி) தெரிவித்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ், பயோமெடிக்கல், கெமிக்கல்ஸ்

சிங்கப்பூரை பொறுத்தவரை எலெக்ட்ரானிக்ஸ், பயோமெடிக்கல் உற்பத்தி மற்றும் ரசாயனங்கள் ஆகிய மூன்று முக்கிய கிளஸ்டர்களில் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது. மேலும் எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் ஜூன் மாதத்தில் 26.2 சதவீதத்தை விரிவுபடுத்தியது, இன்போகாம்ஸ் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் உற்பத்தி வளர்ச்சி அதில அளவில் காணப்பட்டது.

மேலும் மருந்து பொருட்கள் மற்றும் உயிரியல் பொருட்களின் அதிக உற்பத்தியின் காரணமாக மருந்து பிரிவு 45.2 சதவீதம் விரிவடைந்துள்ளது.

சில துறைகளில் வளர்ச்சியின் வேகத்தில் மந்தநிலை.

பொறியியல், போக்குவரத்து பொறியியல் மற்றும் பொது உற்பத்தித் தொழில்களின் வளர்ச்சியில் வேகம் குறைந்துள்ளது. அடுத்தபடியாக போக்குவரத்து பொறியியல் 28.3 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் மே மாதத்தில் 45.9 சதவிகிதாமாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts