சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், பணி அனுமதி பெற்று பல்வேறு துறைகளில் உள்ள கம்பெனிகளில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி வழங்கும் கம்பெனிகள், அவர்களின் நலனுக்காக நிறைய சலுகைகளை வழங்கினாலும் சில காரணங்களுக்காக அவர்களை எப்போது வேண்டுமானலும் பணிநீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளன. அக்காரணங்களைப் பணியாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பணிநீக்கம் என்றால் என்ன?
பொதுவாக பணியாளர் அல்லது பணி வழங்கும் employer பணியைத் தொடர விரும்பாமல் முடிவுக்கு கொண்டு வர விரும்பும் போது, பணியின் contract ஐ முடிவுக்கு கொண்டு வந்து பணியாளர் பணியிலிருந்து வெளியேறுவதே பணி நீக்கம் ஆகும்.
பணிநீக்கம் முன்அறிவிப்புடனோ (with notice) அல்லது முன்அறிவிப்பின்றியோ (without notice) அல்லது பணியாளரின் தவறான நடத்தைக் காரணமாகவோ செய்யப்படலாம்.
பணியின் Contract ஐ யார் முடிவுற செய்ய முடியும்?
பணிவழங்கும் employer அல்லது பணியாளர் இருவரில் யார் வேண்டுமானாலும் பணியின் Contract ஐ முடிவுற செய்ய முடியும்.
பணியாளர் resign செய்யும் போதும்,
Employer பணியாளரை dismiss செய்யும் போதும்,
தானாகவே contract period முடியும் போதும் அல்லது பணி முழுதும் நிறைவடைந்த பிறகும் பொதுவாக பணிநீக்கம் செய்யப்படுகிறது..
பணியாளரும், கம்பெனியும் contract இல் இருக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியம்.
பணியாளரின் resignation ஐ employer ஏற்காவிட்டால் என்னவாகும்?
பணியாளர் தனது resignation ஐ சமர்ப்பிக்க முழு உரிமை உண்டு. அவ்வாறு சமர்ப்பிக்கும்போது employer அதனை மறுக்க இயலாது. அப்படி மறுப்பது குற்றமாகும். ஆனால் பணியாளர் முறையான notice உடன் அல்லது அதற்குண்டான இழப்பீடு தொகையுடன் மட்டுமே resignation செய்ய முடியும்.
பணிநீக்கத்தின் போது பணியாளர் என்ன செய்ய வேண்டும்?
முதலில் பணியாளர் எழுத்து வடிவில் contract இல் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, employer க்கு முன்னறிவிப்பு notice வழங்க வேண்டும். பணியாளர் தன்னுடைய வருடாந்திர விடுப்புகளை notice period இல் சேர்த்து ஈடு செய்யலாம்.
பணியாளர் notice வழங்காமல் பணியிலிருந்து நிற்க விரும்பினால், அதற்குண்டான இழப்பீடு தொகையை employer க்கு செலுத்த வேண்டும்.
ஒருவேளை, பணியாளர் தன்னுடைய தவறான நடத்தைக் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால், employer
எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், பணியாளரிடம் விசாரணையை நடத்த வேண்டும்.
பணியாளர் தான் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நினைத்தால், TADM (Tripartite Alliance for Dispute Management) இல் தவறான பணிநீக்க விவரத்தைப் பதிவு செய்யலாம்.
Notice கொடுத்து பணிநீக்கம்
பணியின் contract இல் குறிப்பிடப் பட்டுள்ள நோட்டீஸ் காலவரம்பிற்கு உட்பட்டு நோட்டீஸ் கொடுத்தபின் பணியாளர் பணியிலிருந்து விலகலாம் அல்லது அதற்கு ஈடான இழப்பீடு தொகை செலுத்திய பின்பு விலகலாம். இல்லையெனில் பணியாளர் மற்றும் employer இருவரும் சமரச ஒப்புதலுடன் நோட்டீஸ் ஐ தள்ளுபடி கூட செய்யலாம்.
பணிநீக்க கடிதம்
பணிநீக்கத்திற்கு பணியாளர் அல்லது employer, யார் காரணமாயினும் எழுத்து வடிவத்தில் பணிநீக்க கடிதம் தர வேண்டியது கட்டாயம் ஆகும்.
பணியாளருக்கு Employer பணி நீக்க கடிதம் வழங்காவிடில், பணியாளர் அதனை கேட்டு பெறுதல் வேண்டும்.
மேலும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்திட employer இன் கையொப்பம் பணிநீக்க கடிதத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
அதே நேரத்தில் employer, Notice காலம் வரை பணிநீக்கத்திற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணியாளர் காரணம் தெரிந்துகொள்ள விரும்பினால் கம்பெனியின் நிர்வாகத்தை அல்லது மனித வளத் துறை (HR) ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
Notice period
Notice period என்பது பணியாளர் மற்றும் Employer இருவருக்கும் பொதுவானது.
பணியாளர் resign செய்யும்போது,ஒன்று notice வழங்கி அதற்குண்டான காலம் வரை பணிபுரிந்து விட்டு, notice period முடிந்த பின்பு பணியிலிருந்து விலகலாம்.
மற்றொன்று notice தராமல், notice காலத்திற்குண்டான இழப்பீடு தொகையை employer க்கு செலுத்திய பின்பு உடனடியாக விலகலாம். இதில் இழப்பீடு தொகை என்பது பணியாளர் ஒருவேளை notice period இல் பணிபுரிந்திருந்தால் எவ்வளவு சம்பளம் பெற்று இருப்பாரோ அந்த தொகை ஆகும். இது gross pay இல் கணக்கிடப்படும்.
Contract இல் notice period ஏதும் குறிப்பிடப்படவில்லை எனில் notice period எப்படி கணக்கிடப்படும்?
பணியாளரின் வேலை contract இல் குறிப்பிட்ட notice period ஏதும் இல்லையெனில், பணியாளரின் பணி புரிந்த
நாட்களைக் கொண்டு தீர்மானிக்கப் படும்.
Length of service Notice period
Less than 26 weeks 1 day
26 weeks to less than 2 years 1 week
2 years to less than 5 years 2 weeks
5 years or more 4 weeks
Notice கொடுக்கப்பட்ட நாள் முதல் notice period துவங்கும்.
இதில் பொது விடுமுறை, ஓய்வு நாட்கள், மற்றும் வேலை நடைபெறாத நாட்கள் அடங்கும். உதாரணம்
ஒரு பணியாளர் இன்று Notice வழங்கினால், அவரது notice period ஒரு நாள் தான் எனில் அவர் இன்றே பணியிலிருந்து விலகலாம்.
ஒரு பணியாளர் ஒரு மாத கால அறிவிப்புடன் ஜூலை15 ம் தேதி notice வழங்கினால், அவர் தனது கடைசி பணி நாளான ஆகஸ்ட் 14 அன்று பணி விலகலாம். இதில் பொது விடுமுறை, ஓய்வு நாட்கள், மற்றும் வேலை நடைபெறாத நாட்கள் அடங்கும்.
ஒரு பணியாளர் ஒரு மாத கால அறிவிப்புடன், ஜனவரி 30, ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் notice வழங்கினால், அவர் தனது கடைசி பணி நாளாக பிப்ரவரி 28 இல் பணியிலிருந்து விலகலாம்.
Notice period ஐ எப்போது தள்ளுபடி செய்யலாம்?
பணியாளர் மற்றும் employer இருவரும் சமரச ஒப்புதலுடன் Notice period ஐ தள்ளுபடி கூட செய்யலாம். ஆனால் அது எழுத்து வடிவ ஒப்புதலுடன் இருக்க வேண்டும்.
Notice period இல் CPF Contribution
Notice period இல் பணியாளர் மற்றும் employer, பணியாளரின் சம்பளத்திற்கு தகுந்தவாறு CPF contribution ஐ செலுத்த வேண்டும்.
ஆனால் பணியாளர் இழப்பீடு கொடுத்து பணி விலகும் போது, CPF contribution செய்ய தேவையில்லை.
Notice period ஐ பாதிக்கும் காரணங்கள்
பணியாளர், பணியிலிருந்து நீக்கப்படும்போது அவர் தன்னுடைய வருடாந்திர விடுப்புகளை பணமாகவோ அல்லது விடுமுறையாகவோ கழித்து கொள்ளலாம்.
வருடாந்திர விடுப்புகளை பணமாக்கும் போது, அது பணியாளரின் கடைசி gross pay இல் கணக்கு செய்து வழங்க வேண்டும்.
பணியாளர் தவறான நடத்தையால் பணிநீக்கம் செய்யப்படும் போது, அவருக்கு இந்த விடுப்பு சலுகைகள் தரப்படாது.
மேலும் பணியாளர், employer ஒப்புக் கொண்டால் தன்னுடைய விடுப்புகளை notice period இல் கழித்து கொள்ளலாம். விடுப்புகள் தவிர்த்து, பணியாளரின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படும். பணியாளர் புதிய நிறுவனத்தில் உடனடியாக வேலையைத் தொடங்கலாம்.
பணியாளர் notice period இல் சம்பளமில்லாத விடுப்பு எடுத்தால், employer பணியாளரின் கடைசி வேலை நாளை நீட்டிக்க இயலும்.
பணியாளர் notice period இல் sick keave எடுத்தால், employer அதனை notice period இல் சேர்த்துகொள்ள வேண்டும். Employer பணியாளரின் கடைசி வேலை நாளை நீட்டிக்க இயலாது.
பணியாளர் notice period இல் இருக்கும் போதும், தற்போதைய employer இன் அனுமதி பெற்ற பிறகே புதிய பணிக்கு செல்ல முடியும்.
Notice தராமல் பணிநீக்கம்
பணியாளர் notice தராமல் பணி விலகினால்,notice காலத்திற்குண்டான இழப்பீடு தொகையை employer க்கு செலுத்த வேண்டும்.
Notice தராமல் பணிநீக்கம் நடைபெற காரணங்கள்?
Contract விதிமுறைகளை மீறும்போது சம்பளம் சரியாக வழங்கபடாதபோது
காரணமின்றி விடுப்புகள் எடுக்கும்போது
வீதிமீறல்களாக கருதப்படுபவை ?
Employer சம்பளத்தை செலுத்த வேண்டிய 7 நாட்களுக்குள் பணியாளருக்கு சம்பளத்தைச் செலுத்தத் தவறினால், பணியாளர் அறிவிப்பு இல்லாமல் வெளியேறலாம். எவ்வாறாயினும், வெளியேற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் முன், ஏன் பணம் செலுத்தப்படவில்லை என்பதை பணியாளர் சரிபார்க்க வேண்டும்.
2 வேலை நாட்களுக்கு மேல் பணியாளர் எந்த சரியான காரணமின்றி பணிக்கு வராமல் இருந்தால் அல்லது காரணத்தைத் தெரிவிக்க முயற்சி செய்யாமல் இருந்தால் employer எந்த அறிவிப்புமின்றி பணியாளரை பணியிலிருந்து நீக்கலாம்.
சிங்கப்பூருக்கு பல்வேறு கனவுகளுடனும், காரணங்களுடனும் பணிபுரிவதற்கு வரும் பணியாளர்கள் சிரமப்பட்டு பெற்ற பணியை எச்சரிக்கையாகத் தொடர்ந்து பாதுகாக்கவும், பணிச்சூழல் சுமையாகும்போது அதிலிருந்து சுலபமாக வெளியேறவும் இந்த பதிவு நிச்சயம் உதவுவதோடு வழிகாட்டியாகவும் இருக்கும்.