TamilSaaga

உங்க Work Pass (IPA) Approve ஆனதும் டிக்கெட் புக் பண்றதுக்கு முன்னாடி நீங்க Check செய்ய வேண்டிய முக்கியமான Documents என்ன தெரியுமா..??

சிங்கப்பூரில் பணிபுரிவதற்கு வரும் பணியாளர்களுக்கு, அவர்களின் work pass Application ஏற்றுக்கொள்ளப்பட்டதும் IPA ( In principle Approval letter) வழங்கப்படும்.இது பணியாளர் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து பணியாளர் சிங்கப்பூர் வருவதற்கு டிக்கெட் புக் செய்வதற்கு முன் சில documents களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானது security bond மற்றும் medical insurance ஆகும்.இவை இரண்டுமே பணியாளர் சிங்கப்பூர் வருவதற்கு முன் பணிவழங்கும் நிறுவனத்தால் எடுக்கப்பட வேண்டும்.

Security Bond தேவைகள்

Security bond என்பது மலேசியர் அல்லாத பணியாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பிற்காக, பணிவழங்கும் நிறுவனத்தால் எடுக்கப்படுகிறது . இதனை எந்த Bank அல்லது insurance கம்பெனியில் வேண்டுமானால் பெறமுடியும்.

இது நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ சட்டம், பணி அனுமதி நிபந்தனைகள் அல்லது பாதுகாப்புப் பத்திர நிபந்தனைகளை மீறினால், அரசாங்கத்திற்கு பணம் செலுத்துவதற்கான உறுதிமொழியாகும்.
பணிவழங்கும் employer, ஒவ்வொரு மலேசியர் அல்லாத work permit வைத்திருக்கும் பணியாளருக்கும்  $5,000 க்கு security bond வாங்க வேண்டும். இதற்கான செலவை பணி வழங்கும் employer ஏற்க வேண்டும். பணியாளர்கள் தர வேண்டிய அவசியம் இல்லை.

Security Bond எப்போது வாங்க வேண்டும்?

பணியாளர் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பாகவே, பணி வழங்கும் employer ஏதாவது ஒரு Bank அல்லது insurance கம்பெனி இல் இதனை வாங்கியிருக்க வேண்டும்.

Security Bond இல் பயனாளி ( beneficiary ) ஆக, MOM ( Ministry of Manpower) என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

Bank அல்லது insurance company இந்த விவரங்களை MOM க்கு அனுப்பி பதிவு செய்திட வேண்டும். இதற்கு 3 நாட்கள் எடுக்கலாம்.

பணி வழங்கும் employer, WP online வழியாக பணியாளரின் security Bond status ஐ சரிபார்த்து கொள்ளலாம்.பின்னர் Security bond acknowledgement letter ஐ print செய்து பணியாளருக்கு அனுப்பிட வேண்டும்.

மேலும் employer, பணியாளர் சிங்கப்பூர் வரும்போது, security bond நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, அது நடைமுறைக்கு வராமல் இருந்தால் பணியாளர் சிங்கப்பூருக்குள் வர இயலாது.

Security Bond எப்போது முடிவுறும் ?

பணியாளரின் work permit cancel செய்யப்படும்போது
பணியாளர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லும்போது
எந்த நிபந்தனையையும் மீறாத போது
Security bond விடுவிக்கப்படும்.
பணியாளர் பொதுவாக சிங்கப்பூரில் இருந்து சென்ற ஒரு வாரத்தில் விடுவிக்கப்பட்டு, employer க்கு தெரிவிக்கப்படும்.

Security Bond எப்போது பறிக்கப்படும் ?

பணியாளர் அல்லது employer work permit மற்றும் security bond நிபந்தனைகளை மீறும் போது
Employer, பணியாளருக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்காதபோது
Employer, பணியாளரின் work permit முடிந்த பிறகும், அவரை திருப்பி அனுப்பாதபோது
பணியாளர் காணாமல் போகும் போது
Employer, CMP துறை பணியாளர்களை onboard centre க்கு அனுப்பாதபோதும் security bond பறிமுதல் செய்யப்படும்.

Medical Insurance தேவைகள்

அனைத்து புலம்பெயர்ந்த பணியார்களுக்கும், பணிவழங்கும் நிறுவனம் medical insurance வழங்க வேண்டும். இதற்கான செலவை பணி வழங்கும் நிறுவனமே ஏற்க வேண்டும்.

பணியாளருக்கு work permit விண்ணப்பிக்கும் போது, medical insurance விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Medical insurance இல் அடங்குபவை

இதில் பணியாளர்களுக்கான inpatient care and day surgery, மற்றும் hospital bills அடங்கும்.

1 July 2023 க்கு முன்பு எடுத்த policy களுக்கு, ஒரு வருடத்திற்கு $15,000திற்கும், 1 July 2023 முதல் ஒரு வருடத்திற்கு $60,000 க்கும் குறைந்த பட்ச insurance காப்பீடு எடுக்கப்பட வேண்டும்.

Enhanced MI

1 July, 2023 முதல், குறைந்த பட்ச insurance தேவையானது பணியாளர்களுக்கான அதிக மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஆண்டிற்கு அதிக பட்சமாக $60,000 claim செய்ய இயலும். இதில் $15,000 க்கு மேலாக claim செய்யப்படும் தொகையில் 75% insurer ம், 25% employer ம் பங்கு கொள்வார்கள்.

சிங்கப்பூருக்கு பணிக்கு வரும் பணியாளர்கள் தங்களுடைய IPA letter, passport உடன் security bond copy மற்றும் medical insurance copy ஐ கொண்டு வருவது, அவர்களின் பாதுகாப்பான வருகையை உறுதி செய்திடும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts