TamilSaaga

முதல் முறையாக சிங்கப்பூருக்கு வரீங்களா..??அப்போ இந்த SIP பற்றி தெரிந்து கொண்டு வாங்க!!! இந்த Program முடித்தால் தான் வேலை செய்ய முடியும்

சிங்கப்பூருக்கு முதன்முறையாக Manufacturing Sector மற்றும் Construction, Marine Shipyard and Process (CMP) Sector களில் பணிபுரிவதற்கு வரும் மலேசியர் அல்லாத ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள், மற்றும் சிங்கப்பூர் நாட்டிற்கு திரும்பும் IPA (In principle Approval) வைத்திருக்கும் பணியாளர்கள், தங்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ள சிங்கப்பூர் அரசாங்கம் நடத்தும் SIP எனப்படும் Settling-in programme இல் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

SIP என்பது புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு சிங்கப்பூரின் சமூக விதிமுறைகள், அவர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் பொறுப்புகள், சிங்கப்பூர் சட்டங்கள் மற்றும் எங்கு, எப்படி உதவி பெறுவது போன்றவற்றைக் கற்பிப்பதற்கான ஒரு 1 நாள் திட்டமாகும்.

எப்போது கலந்து கொள்ள வேண்டும்?

Manufacturing Sector இன் அனைத்து பணியாளர்கள் மற்றும் CMP sector களில் பணிபுரிய வரும் பெண் பணியாளர்கள், சிங்கப்பூருக்கு வந்த 2 வாரங்களுக்குள் இந்த SIP இல் கலந்து கொள்ள வேண்டும்.

CMP Sector களில் பணிபுரிய வரும் ஆண் பணியாளர்கள் சிங்கப்பூரின் Onboard Centre க்கு வந்தவுடன் கலந்து கொள்ள வேண்டும்.

எங்கே கலந்து கொள்ள வேண்டும்?

Manufacturing Sector இன் அனைத்து பணியாளர்கள் மற்றும் CMP sectorகளில் பணிபுரிய வரும் பெண் பணியாளர்கள், Migrant Workers Center எனப்படும் MWC Recreation Club @ Soon Lee இல் கலந்து கொள்ள வேண்டும்.

CMP Sector களில் பணிபுரிய வரும் ஆண் பணியாளர்கள் சிங்கப்பூரின் Onboard Centre இல் கலந்து கொள்ள வேண்டும்.

கால அளவு

ஒரு நாள் மட்டும். அனைத்து Migrant பணியாளர்களும் work permit வழங்கப்படும் முன் SIP இல் கலந்து கொள்வது கட்டாயம்.

SIP Registration

பணி வழங்கும் நிறுவனம், Manufacturing Sector இன் அனைத்து பணியாளர்கள் மற்றும் CMP sectorகளில் பணிபுரிய வரும் பெண் பணியாளர்களுக்கு MWC website இல் இதற்காக பதிவு செய்ய வேண்டும்.

CMP Sector களில் பணிபுரிய வரும் ஆண் பணியாளர்களுக்கு சிங்கப்பூரின் residential Onboard programme திட்டத்தில் இதற்காக பதிவு செய்ய வேண்டும்.

என்னென்ன மொழிகளில் SIP நடைபெறும்?

பணியாளர்களின் தாய் மொழியில் நடத்தப்படும்.

English
Bengali
Burmese
Mandarin
Tamil
Thai
Vietnamese போன்ற மொழிகளில் நடத்தப்படும்.

SIP இல் கலந்து கொள்ள பணியாளர்கள் வைத்திருக்க வேண்டிய Documents

IPA letter – full set, employee’s copy
Passport

SIP இல் கற்பிக்கப்படும் விவரங்கள்

Introduction to Singapore
Local practices and social norms
Employment laws
Employment rights
Working safely and Work Injury Compensation Act
Key laws
Mobile application orientation
Remittance and unlicensed money lenders
Primary Care Plan and Medical Centres for Migrant Workers
Preventive health and living safely tips
Mental health
Recreation centres in Singapore

மேற்கூறிய விவரங்களைத் தெரிந்து கொண்டு முதன்முறையாக சிங்கப்பூர் வருபவர்கள் , SIP programme ஐயும் சிங்கப்பூரையும் அச்சமின்றி எதிர்கொண்டு சிறப்பாக பணியாற்ற முடியும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts