TamilSaaga

சிங்கப்பூரில் ஊழியர்கள் தங்களின் Dormitory-ல் இருந்தே… வெளியில் போக வேண்டிய இடத்தை ‘Street View’-ல் பார்ப்பது எப்படி?

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கூகுள் மேப்ஸில் இருக்கும் ‘Street View’ வசதி பலவகைகளிலும் உதவி செய்யும்… எப்படி அதைப் பயன்படுத்துவது… எளிதாக நாம் செல்ல வேண்டிய இடங்களைப் பற்றிய தகவல்களை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வது எப்படி?

சிங்கப்பூர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விடுமுறை தினத்தைக் கழிக்கவும், முக்கியமான விசேஷஙகளுக்காக ஊர் திரும்பும் முன்னர் ஷாப்பிங் செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பவர்கள். அதேபோல், விடுமுறை தினங்களில் சிங்கப்பூரின் மிகப்பிரபலமான சுற்றுலா தலங்களையும் அவர்கள் விசிட் செய்வதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் வேலைபார்க்க வந்திருக்கும் ஆரம்ப நாட்களில் சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கியமான இடங்களுக்கு எப்படி செல்வது என்பதை அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருந்த அனுபவம் வாய்ந்த நண்பர்கள், மூத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் கூகுள் மேப்பின் உதவியோடு சிங்கப்பூரின் முக்கிய இடங்களுக்குச் சென்று வருவோரும் உண்டு. அப்படி டெக்னாலஜியைப் பயன்படுத்தும் பலருக்கும் கூகுள் மேப்ஸில் ‘Street View’ என்ற ஆப்ஷன் இருப்பது தெரிவதில்லை. இந்த ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் எப்படி இருக்கின்றன என்பதை 360 டிகிரியில் போட்டோ வாயிலாக நேரடியாகவே பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க – “இதுவே தமிழ் மக்கள் எனக்கு தந்த முதல் அங்கீகாரம்” – தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த “சிங்கப்பூர் நடிகர் மதியழகன்” – அரங்கையே அதிர வைத்த “கைத்தட்டல்கள்”

கூகுள் மேப்

கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தாதவர்கள், தங்கள் ஸ்மார்ட்போனில் ‘Maps’ என டைப் செய்தால், வரும் ஆப்பைத் திறங்கள். உங்களின் ஸ்மார்ட்போனில் லொகேஷன் ON-ல் இருந்தால், அது தற்போது நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மேப்பைக் காட்டும். ஒருவேளை லொகேஷன் வசதி ஆஃப் செய்யப்பட்டிருந்தால், ‘Settings’ பகுதிக்குச் சென்று ‘Location Permission’ என்பதை ஆன் செய்து விடுங்கள்.

அதன்பிறகு, கூகுள் மேப் ஆப்-ஐ திறங்கள். அதில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் அல்லது பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலம் பற்றிய தகவல்களை மேலே இருக்கும் டயலாக் பாக்ஸில் டைப் செய்யுங்கள். இப்படி நீங்கள் டைப் செய்யும்போதே, அந்த இடம் பற்றிய தகவல்கள் டயலாக் பாக்ஸுக்குக் கீழே ‘Recommendation’ அடிப்படையில் காட்டும். புத்திசாலித்தனமாக, உங்களுக்குத் தேவையான இடத்தை நீங்கள் ‘Spelling Mistake’ இல்லாமல் அதிலிருந்தே தேர்வு செய்துகொள்ளலாம்.

அதன்பிறகு நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து, குறிப்பிட்ட அந்த இடத்துக்கு எப்படிச் செல்வது என்பதற்கான மேப் உங்களுக்கு வழியைக் காட்டும். இது கூகுள் மேப்ஸின் அடிப்படையான பயன்பாடு. அது காட்டும் வழியில் சென்றால், நீங்கள் குறிப்பிட்ட இடத்தை விரைவாக அடைய முடியும். அதேபோல், வழியில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்ட விவரத்தையும் கூகுள் மேப்ஸ் உங்களுக்குக் காட்டிவிடும். இதன் அடுத்தகட்டம்தான் ‘Street View’. இந்த வசதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸில் Street View எப்படிப் பார்ப்பது?

இதற்காக கூகுளின் மேப்ஸ் செயலி அல்லது பிரத்யேகமாக இருக்கும் Street view ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். கூகுள் மேப்ஸ் செயலியைப் பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட இடத்தை டைப் செய்து, மேப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கீழே ‘Scroll’ செய்யுங்கள். கீழே வரும்போது 360 டிகிரி போட்டோ என்பதைக் குறிக்கும் அடையாளம் சில போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும். அந்தப் போட்டோவை கிளிக் செய்தால், உங்களால் நீங்கள் விரும்பிய குறிப்பிட்ட இடம் எப்படி இருக்கிறது, அந்த இடத்தில் இருக்கும் கடைகள் பற்றிய விவரங்கள், எங்கே வலதுபுறம் திரும்புவது, இடதுபுறம் திரும்புவது போன்ற விவரங்களை நேரில் பார்ப்பது போன்றே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க – மரணத்தின் எல்லைக்கே சென்ற ரஜினிகாந்த்… கடைசி நேரத்தில் உயிரைக் காப்பாற்றி.. மரணக் கணக்கை திருத்தி எழுதிய சிங்கப்பூர் “மவுண்ட் எலிசபெத்” மருத்துவமனை

மேலும், அந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சிக்னல்கள், ஹோட்டல்கள், பார்க்கிங் வசதி, ஷாப்பிங் சென்டர்கள் போன்றவற்றையும் நேரில் சென்று பார்ப்பது போலவே வலது,இடதுபுறம் போட்டோவை நகர்த்தித் தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம், குறிப்பிட்ட அந்த இடம் எப்படியான சூழலில் அமைந்திருக்கிறது, அதன் அமைவிடம், டிராஃபிக் போன்ற விஷயங்களையும் தெரிந்துகொள்ளலாம். ஒரு இடத்துக்குப் போவதற்கு முன்பு, இப்படி கூகுளின் 360 டிகிரி போட்டோக்களைப் பயன்படுத்தி அந்த இடம் பற்றிய தகவல்களை நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டால், அங்கு சென்றுவர உங்களுக்கு எளிதாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூரில் வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் யாருடைய உதவியும் இல்லாமல், இந்த வசதியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் எந்தவொரு இடத்துக்கும் எளிதாகச் சென்று வர முடியும்.

அதேபோல், ஏஜெண்டுகள் உதவியோடு ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்க நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனம் அமைந்திருக்கும் முகவரி மட்டும் உங்களுக்குத் தெரிந்தால் போதும், அந்த நிறுவனம் அமைந்திருக்கும் பகுதி எப்படியிருக்கிறது என்பதை கூகுள் மேப்ஸின் இந்த வசதியைப் பயன்படுத்தி எளிதாக அறிந்துகொள்ள முடியும். அந்தப் பகுதியில் உண்மையிலேயே அப்படி ஒரு நிறுவனம் செயல்படுகிறதா என்பதைப் பற்றியும் இதில் நீங்கள் செக் செய்து கொள்ள முடியும். ஆரம்பகாலங்கள் நிகழ்நேர அப்டேட்டுகளை கூகுள் ‘Street View’ கொடுத்துவந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பல்வேறு நாடுகளில் அந்த வசதி இப்போது அளிக்கப்படுவதில்லை.

அதேநேரம், கூகுள் மேப்ஸில் 360 டிகிரி போட்டோவாக பயனாளர்கள் பதிவேற்றும் போட்டோகள் மூலம் அந்தப் பகுதியின் நிலையை நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வுகளை நீங்கள் பெற முடியும். கூகுளே நேரடியாக சிங்கப்பூரின் தெருக்கள், சாலைகள் பற்றிய புகைப்படங்களை எடுக்க 2018-ல் கூகுள் மேப்ஸ் சார்பில் முதல் முயற்சி எடுத்தது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிகபட்ச திறன் கொண்ட கேமராக்களைக் கொண்ட வாகனங்கள் சிங்கப்பூரில் பல மாதங்களாக வலம் வந்தன. இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் எடுக்கப்பட்ட ‘High Quality’ புகைப்படங்கள் மூலம் சிங்கப்பூரில் கூகுளின் ‘Street View’ புகைப்படங்களின் தரம் மேம்படுத்தப்பட்டது. இதன்மூலம், நீங்கள் குறிப்பிட்ட புகைப்படத்தை ‘Zoom’ செய்தும் குறிப்பிட்ட இடம் அல்லது ஹோட்டல், நிறுவனங்கள் பற்றிய விவரஙகளை அறிந்துகொள்ள முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts