TamilSaaga

சிங்கப்பூரில் உணவுச்செலவு உங்கள் சம்பளத்தில் பாதியை காலி ஆக்கி விடுகிறதா… கவலையை விடுங்கள்… இனி செலவை பற்றி டோன்ட் ஒரி!

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக சம்பளத்திற்காக இங்கு வேலைக்கு வந்தாலும் இங்கே வீட்டு வாடகை மற்றும் உணவுச் செலவு இவற்றை கணக்கில் கொண்டால் நம்மூரில் வாங்கும் ஊதியத்தை விட ஏதோ சற்று அதிகமாக இங்கே கையில் மீதம் இருக்கும். ஏனென்றால் சிங்கப்பூரை பொறுத்தவரை உணவிற்கே சம்பளத்தில் 25 சதவீதம் செலவழிக்க வேண்டியது இருக்கும். இதற்காகவே சிங்கப்பூரில் வாழும் பெரும்பாலான ஊழியர்கள் காலை உணவினை டீயுடன் நிறுத்திக் கொள்கின்றனர்.

எனவேதான் சிங்கப்பூரில் வாழும் மக்களின் உணவுச் செலவை குறைப்பதற்காக குறைந்த விலையில் எங்கு உணவு கிடைக்கும் என்பது குறித்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் எங்கெங்கெல்லாம் உணவு கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை https://www.go.gov.sg/budgetmeal என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான மக்களிடம் கொண்ட கருத்து கணிப்புகளை அடிப்படையாக வைத்து இந்த திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் காபி,கூல் ட்ரிங்ஸ் முதலிய அனைத்து உணவுகளும் எங்கு குறைவாக கிடைக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிங்கப்பூரில் வாழும் பல வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த இணையதளம் மிகவும் உபயோகமாக இருக்கும். ஆனால் இது எல்லாவற்றையும் விட சிறந்த வழி நம்ம ஊர் சாதத்தை ஒருவேளை ஆவது வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆகும். அதற்கு வழியில்லாத பட்சத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related posts