TamilSaaga

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள்.. உங்கள் சிங்கப்பூர் IPAவை Cancel செய்யமுடியுமா? இந்த விஷயத்தில் MOM உங்களுக்கு உதவுமா?

சிங்கப்பூர் வரும் அனைவருக்கும் IPA பற்றி தெரிந்திருக்கும், In-Principle Approval (IPA) என்பது தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிங்கப்பூர் அழைத்து வருவதற்கு இந்த IPA என்பது மிகவும் அவசியமான ஒன்று இன்னும் சொல்லப்போனால் எந்த வகை பாஸ் மூலம் நீங்கள் சிங்கப்பூர் வந்தாலும் IPA என்பதும் அவசியம்.

சரி இந்த பதிவில் நமக்கு தெரியாமலே நமக்கான IPA அளிக்கப்பட்டால் அதை எப்படி Cancel செய்வது என்பதை காணலாம்.

சரி IPAஐ ஏன் Cancel செய்யவேண்டும்?

சிங்கப்பூரில் வேலை கிடைப்பதே பெரிய விஷயம், இந்த நிலையில் ஏன் நாம் IPAவை Cancel செய்யவேண்டும் என்று நீங்கள் கேட்பது முறையே. IPA என்பது, அதை உங்களுக்கு பெற்று தரும் ஏஜென்டுகள் முறையாக உங்கள் அனுமதியோடு பெற்றுத்தரவேண்டிய ஒன்று.

என்ன நிறுவனம், சம்பளம் எவ்வளவு, பயணத்திற்கு ஏஜெண்டுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று இப்படி பல விஷயங்களை உங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பிறகு உங்கள் விருப்பத்துடன் தான் IPA Apply செய்யப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் வெகு சில ஏஜெண்டுகள் நம்மிடம் எதையுமே கேட்காமல் குறைந்த சம்பளத்தில் உள்ள வேலைக்கு IPA எடுத்துவிடுவார்கள்.

இந்த நேரத்தில் தான் நமது IPAவை Cancel செய்யவேண்டிய அவசியம் நமக்கு ஏற்படும், இதை விட அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்போது ஏற்கனவே உள்ள IPA மூலம் நமக்கு பிரச்சனை வர வாய்ப்புகளும் உள்ளது.

பார்க்கும் ஏஜெண்டுகள் எல்லாரிடமும் பாஸ்ப்போர்ட்டை கொடுத்து வைப்பதே இது போன்ற தொல்லைகள் ஏற்பட முதல் காரணம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதென்ன கொடுமை! சிங்கப்பூர் Ubi flat வீட்டின் சுவரை இடிக்க இடிக்க கிடைத்த Foam பஞ்சுகள் – வீடியோ வைரலாக உடனே விளக்கம் கொடுத்த HDB

சரி இந்த சிக்கலை எப்படி சரி செய்வது?

இன்றைய காலகட்டத்தில் சிங்கப்பூர் வேலை கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் கிடைத்த வேலையை ஏற்பது முதல் வழி. நிச்சயம் அதற்கான ஏஜென்ட் fees நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது அந்த குறிப்பிட்ட IPAவை உங்களுக்கு Apply செய்த ஏஜென்ட் யார் என்று தெரிந்தால் அவரிடமே பேசி இதை விட நல்ல சம்பளத்தில் நான் வேலை எதிர்பார்க்கிறேன் என்று கூறி அதை Cancel செய்வது. நிச்சயம் இதற்கும் நீங்கள் கணிசமான தொகையை அந்த ஏஜென்டிடன் கொடுக்க நேரிடும். அதேபோல் IPA Cancel ஆகும் வரை பொறுத்து பின் பணத்தை கொடுப்பது நல்லது.

ஏஜெண்டுகள் மூலமே Cancel செய்வதே சிறந்த வழி என்பதும் நினைவுகூரத்தக்கது. பணம் பறிக்கும் எண்ணத்தில் ஒருசில ஏஜெண்டுகள் இருந்தாலும், 95 சதவிகித ஏஜெண்டுகள் நம் நிலைமையை புரிந்து செயல்படுபவர்களாகவே உள்ளனர் என்பதில் மாற்று கருத்தில்லை.

MOM அளிக்கும் தகவலின்படி ஒரு IPA என்பது அளிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும். ஆகவே அந்த காலம் முடியும் வரை காத்திருந்து அடுத்த IPA பெறலாம்.

மேலே சொன்ன வழிகள் எதுவுமே சரிப்பட்டு வரவில்லை என்றால் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் சிங்கப்பூரில் இருந்தால் அவர்கள் மூலம் MOM அலுவலகத்தை நேரில் அணுகி விஷயத்தை விளக்கி நீங்கள் IPAவை Cancel செய்யலாம்.

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட தமிழர்?..GIC சிங்கப்பூர் நிறுவனத்தின் மீது புகார் – போலீசார் தீவிர விசாரணை

தாய் நாட்டில் இருந்துகொண்டே சிங்கப்பூரின் MOMக்கு தொடர்பு கொண்டு இதை நீங்கள் செய்யமுடியும். ஆனால் வெளிநாட்டு கால் என்பதாலும் MOM அதிகாரிகளுக்கு Line கிடைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதாலும் இது சற்று சிரமமான வழி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே உங்களுக்கான IPA உங்கள் அனுமதி இன்றி வருகின்றது என்றால் மேற்குறிய இந்த வழிகளில் அதை நீங்கள் நிச்சயம் Cancel செய்ய முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts