சிங்கப்பூர்: ரமலான் (Ramadan ) திருநாளை முன்னிட்டு இணையத்தில் சுற்றித்திரியும் போலி விளம்பரங்களுக்கு முறையாக கண்காணிக்குமாறு சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த போலி விளம்பரத்தில், முஸ்லிம்களுக்கு ஜகாத் உதவித்தொகையாக 1,000 வெள்ளி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்புமாறு அவையில் இடம் பெற்றுள்ளது. இதில், பெயர் மற்றும் தொடர்பு எண்ணை வழங்கினால், முயிஸ் மூலம் ஜகாத் உதவித்தொகையைப் பெறலாம் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முயிஸ் விளக்கம்:
ஜகாத் உதவித்தொகையைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகள் இணையம் வழியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இதுபோன்ற உதவிக்கான விண்ணப்பங்கள் நேரடியாக சமூக மேம்பாட்டு பள்ளிவாசல்களுக்குச் சென்று, சமூக மேம்பாட்டு அதிகாரியின் உதவியுடன் மட்டுமே செய்யப்பட முடியும்.
சிங்கப்பூரின் ஸகாத் நிதி நிர்வாகத்தைப் பார்த்து வரும் ‘ஜகாத் சிங்கப்பூர்’ சின்னமும் போலி விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
முயிஸ் வலியுறுத்தல்:
கேலாங் செராய் ரமதான் சந்தை: பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து காவல்துறையின் எச்சரிக்கை!!!
இந்த போலி விளம்பரத்தை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம்.
இது தொடர்பான தகவல்களை உடனடியாக info@muis.gov.sg மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். முஸ்லிம் சமூகத்தினர் இந்த போலி விளம்பரங்களில் மாட்டாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முயிஸ் அறிவுறுத்தல்:
இந்த எச்சரிக்கையுடன், முஸ்லிம் சமூகத்திற்கு இது போன்ற மோசடிகளை தடுக்க உறுதிப்படுத்தும் முயற்சிகளின் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.