சிங்கப்பூரில் வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் வரவிருக்கும் மூன்று மாதங்களுக்கு அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து எஸ்பி குழுமம் City Gas நிறுவனமும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர். மின்சார உற்பத்திக்கான எரிபொருளின் விலை உயர்வால் இந்த கட்டண அதிகரிப்பு அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மின் கட்டணம் சராசரியாக 3.8 விழுக்காடு அதிகரிக்கும் என்று எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.
இனி ஒரு கிலோ வாட் மின்சாரத்துக்கு 23.38 காசுகள் வசூலிக்கப்படும். தற்போது ஒரு கிலோ வாட் மின்சாரத்துக்கு 22.55 காசுகள் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நான்கு அரை கழக வீடுகளுக்கான மாதாந்திர மின் கட்டணம் இனி சராசரியாக 3.4 வெள்ளி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 0.4 காசுகள் அதிகரிக்கும் என்று City Gas நிறுவனம் தெரிவித்துள்ளது.