TamilSaaga

கொரோனா ஆதரவு திட்டத்தின் நிலை அறிக்கை – ஜூலை 5ம் தேதி வெளியிடும் அமைச்சர்

கொரோனா ஆதரவு திட்டங்களுக்கான நிலை அறிக்கையை வரும் ஜூலை ஐந்தாம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவிக்க உள்ளார் சிங்கப்பூர் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அவர்கள்.

சிங்கப்பூரில் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர சிங்கப்பூர் அரசு விதித்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஜூலை 5ஆம் தேதி மாலை 3 மணிக்கு நிதியமைச்சர் வாசிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை ஆதரவு திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மேலும் நோய்த்தொற்றின் அளவு குறையும் பட்சத்தில் ஏற்கனவே ஜூன் 14ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட தளர்வுகளை போல நோய் தொற்றின் அளவை பொறுத்து ஜூலை மாத நடுப்பகுதியில் மேலும் தளர்வுகள் வழங்கப்படும்.

Related posts