TamilSaaga

பிரான்ஸ் நாட்டில் பரவிய காட்டுத்தீ – Grimaud பகுதியில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி மரணம்

தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் “பீட்டா” வகை வைரஸ் பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பிரான்ஸ் அரசு நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. மேலும் “சுகாதார பாஸ்” என்ற ஒன்றை அறிமுகம் செய்து மக்களின் சுகாதார நிலையை கடுமையாக கண்காணித்து வருகிறது பிரான்ஸ் நாட்டு அரசு.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு கூடுதல் தலைவலியாக தெற்கு பிரான்ஸ் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவி வரும் நிலையில் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள செயின்ட் Tropez என்ற நகரத்தில் தான் தற்போது இந்த காட்டுத் தீயானது மிக பயங்கரமான அளவில் பரவிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் 1200 அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் GRIMUAD என்ற நகருக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீ பற்றி எரிந்தது. இதில் அந்த வீடு முழுமையாக தீயில் கருகி நாசமானது. மேலும் இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த இரண்டு பேரும் பரிதாபகரமாக தீயில் கருகி உயிரிழந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீ காரணமாக 7000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். புவி வெப்பமாதலை தடுக்காமல் இருப்பதே இந்த தீடீர் காட்டுத்தீ சம்பவங்களுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Related posts