TamilSaaga

மின்சார கோளாறு?.. வரிசையில் காத்திருந்த மக்கள் – சிங்கப்பூரில் சிறிது நேரம் தாமதமான MRT சேவை

சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை காலை (ஜூலை 29) மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் பெரிய அளவில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. SMRTயின் லைன் ஆப்பரேட்டர் இன்று காலை 9 மணியளவில் ஒரு சமூக ஊடக இடுகையின் வழியாக தாமதம் குறித்து பயணிகளுக்கு தகவல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் வெளியான சமூக வலைதள பதிவின்படி பயணிகளுக்கு கால்டெகோட் மற்றும் கென்ட் ரிட்ஜ் இடையே 30 நிமிட பயண நேரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. அடுத்தடுத்து வெளியான பதிவுகளில் ரயில் சேவைகள் மேலும் தாமதமாகும் என்று கூறப்பட்டது. மேலும் காலை 10 மணியளவில் வெளியான பதிவின்படி கால்டெகாட் மற்றும் கென்ட்ரிட்ஜ் இடையேயான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த பதிவில் வழக்கம்போல பிஷனுக்கும் ஹார்பர்ஃபிரண்டிற்கும் இடையில் இலவச பேருந்து சேவைகள் கிடைக்கின்றன என்றும். கால்டெகோட் மற்றும் கென்ட்ரிட்ஜ் இடையே ஒரு ரயில் சேவையும் உள்ளது என்று தெரிவித்தது.

மேலும் “சிறிய மின்சார பிரச்சனையின் காரணமாக மக்கள் தயவு செய்து பேருந்துகளில் செல்லுங்கள்” என்ற கோரிக்கையும் ஊழியர்கள் முன்வைத்தனர்.

Related posts