TamilSaaga

“மயில்களின் தாக்குதலை தடுக்க கண்ணாடிகள் மற்றும் அறிவிப்பு பலகைகள்” : Sentosa முடிவு

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (நவம்பர் 28) சிராங்கூன் பகுதியில் மூன்று வயதுச் சிறுமி, அந்த பகுதியில் இருந்த ஒரு வளர்ப்பு மயிலால் தாக்கப்பட்ட நிலையில் அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் மோசமாக வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமி, சிராங்கூன் கார்டனில் உள்ள ஹவுஸ் பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்து தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மயிலைப் பார்ப்பதற்காக ஒரு வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தாள், அப்போது தான் அந்த மயில் தாக்கியது என்று அந்த சிறுமியின் தாய் கூறினார்.

இதையும் படியுங்கள் : “மறுசுழற்சி செய்தால் பணம்”

இதனையடுத்து Nature Society-யின் பறவைக் குழுவின் தலைவர் திரு. டான் கிம் சியோங், மயில்கள் ஆக்ரோஷமான உயிரினங்களாக இருக்கலாம் என்று கூறினார், சென்டோசாவில் கார்களைத் மயில்கள் தாக்கிய சம்பவங்கள் உண்டு என்றார் அவர். “தங்கள் எல்லைக்குள் ஊடுருவுவதாக நம்பி, அவர்களை துரத்துவதற்குத் தாக்கும் என்றும் அதன் எல்லையை காக்க, முக்கியத்துவம் வாய்ந்த எதையும் அவை தாக்கக்கூடும்” என்று திரு டான் கூறினார்.

இந்நிலையில் சென்டோஸாவில் 60-க்கும் மேற்பட்ட ஆண் மாற்று பெண் மயில்கள் உள்ளன என்றும், தற்போது மயில்கள் மக்களை தாக்குவதை தவிர்க்க வாகன நிறுத்துமிடம் உளப்பட பல இடங்களில் கண்ணாடிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பளபளக்கும் விஷயங்கள் பொதுவாக மயில்களின் கவனத்தை ஈர்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்றும் கூறப்படுகின்றது.

செண்டோசாவிற்கு முதன்முதலில் 1980களில் தான் மயில்கள் கொண்டுவரப்பட்டன என்று கூறப்படுகின்றது. தற்போது பல இடங்களில் அவை வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts