சிங்கப்பூரின் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் புதன்கிழமை ஆன நேற்று சரக்குகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனம் தீப்பிடித்து எரியும் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது. வாகனம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு தீ எரிந்து வாகனத்திற்கு மேலே உள்ள மரங்கள் முழுவதும் தீ பரவி அந்த இடம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிப்பது வீடியோவில் தெரிகின்றது
இது குறித்து குடிமை தற்காப்பு படை காவலர்கள் கூறும்பொழுது புதன்கிழமை இரவு எட்டு மணி அளவில் தீ பரவியது எனவும் உடனடியாக விரைந்து சென்று வாகனத்தில் உள்ள தீயை தண்ணீர் பாய்ச்சி அணைத்ததாகவும் கூறினர். எனினும் சரக்குகளை ஏற்றுச்சென்ற வாகனம் என்பதால் வாகனத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் தீயில் எறிந்து போயின. சாலையில் சென்று கொண்டிருக்கும் லாரியில் திடீரென்று தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக போலீசார் கூறினர்.