TamilSaaga

உலக அளவில் மாஸ் காட்டப் போகும் தமிழ்நாடு -சிங்கப்பூர் கூட்டணி… சிங்கப்பூர் அதிகாரி ட்விட்டரில் வெளியிட்ட முக்கிய அப்டேட்.!

உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் கூட்டமானது ஜனவரி 7 மற்றும் எட்டாம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகின்றது.2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலரை தொட வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசானது முனைந்து செயல்பட்டு வருகின்றது.

இதனை ஒட்டி சிங்கப்பூர் இன் இந்தியா என்ற ட்விட்டர் கணக்கில் வெளியான முக்கிய அறிவிப்பு தமிழ்நாட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய நாட்டிற்கான சிங்கப்பூரில் உயர் கமிஷனர் தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கிளம்பி விட்டோம் என அப்டேட் வெளியாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய நாடாக சிங்கப்பூர் பார்க்கப்படும் வேளையில் ஐந்து பில்லியன் சிங்கப்பூர் டாலர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தங்கள் ஜனவரி 7 ஆம் தேதி சென்னை டிரேட் சென்டரில் நடக்கவிருக்கும் சிங்கப்பூர் கூட்டத்தில் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல் முதலாக பகற்கும் இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts