TamilSaaga

தமிழர் திருநாளாம் பொங்கலை அமர்க்களபடுத்த காத்திருக்கும் இந்தியா… “கலை நிகழ்ச்சிகள் முதல் பொங்கல் சோறு வரை..” விருந்தளிக்க காத்திருக்கும் ஏராளமான நிகழ்ச்சிகள்!

தீபாவளியை போன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளும் சிங்கப்பூரில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் லிட்டில் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பொதுமக்களை குதுகலப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன என லிசா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கம் மற்றும் இந்திய மரபுடைமை சங்கம் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

பொங்கல் கொண்டாட்டத்திற்காக இரு வாரங்களுக்கு லிட்டில் இந்தியாவின் மற்றும் கிளைவு ஸ்ட்ரீட் இன் ‘பொலி’ எனப்படும் திறந்த வெளியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 5ஆம் தேதி ஆன வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியிலிருந்து ஆறு மணி வரை விக்னேஷ் மாட்டுப்பண்ணையில் இருந்து கால்நடைகள் வரவழைக்கப்பட உள்ளன. இந்த கால்நடைகளை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இந்த மாதம் 16ஆம் தேதி வரை பொதுமக்கள் திறந்தவெளி பகுதியில் கால்நடைகளை இலவசமாக கண்டுக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆறாம் தேதி மாலை ஆறரை மணி அளவில் திருநாளுக்கான வண்ண விளக்குகள் ஒளிவூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகள் ஆனது பிப்ரவரி ஆறாம் தேதி வரை தொடர்ந்து எரியும். மேலும் ஜனவரி 6 மற்றும் 13 ஆம் தேதி தீபாவளிக்கு வலம் வந்த தேக்கா ராஜா எனப்படும் பெரிய யானை பொம்மை ஆனது வலம் வரும். ஏழாம் தேதி ‘இக்காலத்து இளைஞர்கள்’ என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி எட்டாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் 13 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை தேக்காவின் திறந்தவெளி பகுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி விழாவில் இந்தியாவை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கு பெரும் விழாவினை கண்டு ரசிக்கலாம். மேலும் 15 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவசமாக பொங்கல் சோறு வழங்கப்படும். பொங்கல் சாப்பிட்டு நீண்ட வருடங்கள் ஆயிற்று என நீங்கள் தேக்கா தெருவிற்கு ஒரு ரவுண்டு சென்று பொங்கலை ருசித்து மகிழலாம்.

Related posts