TamilSaaga

“செஞ்சது எல்லாம் தப்பு.. ஆனா கடுப்பில் சிங்கப்பூர் அரசு மீதே வீண்பழி” – 4200 “ஆபாச வீடியோகள்” வைத்திருந்த இளைஞருக்கு தண்டனை

சிங்கப்பூரில் 4,200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருந்ததற்காக கூறப்படும் 28 வயதான வோங் மிங் ஜூன் என்ற சிங்கப்பூரருக்கு நேற்று ஏப்ரல் 8ம் தேதி S$42,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆபாசமான தரவுகளை வைத்திருந்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், அதேபோன்ற எட்டு குற்றச்சாட்டுகள் அவருடைய தண்டனையின்போது பரிசீலிக்கப்பட்டது. இந்த ஆபாச தரவுகளை அவர் பொதுவெளியில் பரப்பாத நிலையில் அவருக்கு சிறை தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு Telegram குழுவில் அதிக அளவிலான ஆபாச படங்கள் பகிரப்படுவதாக பெண் ஒருவர் கடந்த 2019 ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். சுமார் 24,000 நபர்கள் கொண்ட அந்த குழுவில் குற்றவாளியும் கடந்த 2018ம் ஆண்டு இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இது “வேற லெவல்” கடத்தல்.. சிங்கப்பூர் அதிகாரிகளிடம் பயத்தில் வாய்க்கு வந்ததை உளறிய டிரைவர்.. திறந்து பார்த்தால் மொழுமொழுன்னு “மலைப்பாம்புகள்” – வசமாக சிக்கிய மலேசிய லாரி!

இதனையடுத்து நவம்பர் 2019ல் 4200க்கும் அதிகமான ஆபாச படங்கள் மற்றும் புகைப்படங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். அன்று தொடங்கி நடந்து வந்த வழக்கில் தற்போது அவருக்கு தண்டனையாக 42,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த Telegram குழுவில் இருந்த மேலும் சிலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Wongன் கதை என்ன?

வோங் 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வந்த நேரம் தான் உலக அளவில் பெருந்தொற்று அதிகரித்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 2021ல் Nikkei Asia என்ற செய்தி தலத்தில் Article ஒன்றை எழுதியுள்ளார் வோங்.

அதில் சிங்கப்பூர் அரசு பெருந்தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் KTV Cluster விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சித்துள்ளார். ஆனால் அதற்கு அப்போதே சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகம் அவரது கருத்துக்களை Point by Point ஆக விளக்கி அதில் வோங் கூறிய தவறுகளை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Marina Bay MRT சாலை தடுப்பு Barriers.. ரயிலை பிடிக்க 2 நிமிடம் Late ஆவதாகக் கூறி.. எகிறிக் குதிக்கும் “டிப்டாப்” Office பெண்கள் – “ஆப்பு” வைக்கும் அரசு!

சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் கூட அவருடைய சர்ச்சை கட்டுரைக்கு பதில் எழுதியதும் நினைவுகூரத்தக்கது. அதில் “வோங், அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை தொடர்ந்து தான் இப்படி அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முனவைக்கிறார்” என்று கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts