Marina Bay MRT நிலையத்திற்கு ரயிலை பிடிக்கச் செல்லும் பல பயணிகள், Marina Bay சாலையை கடக்க இந்த இரு தேர்வில் ஒன்றைத் தான் தேர்வு செய்ய வேண்டும்.
ஆப்ஷன் 1) மரினா பே சாலையைக் கடக்க அங்கிருக்கும் barrier மேல் ஏறி தாவி அந்த பக்கம் செல்ல வேண்டும்

2) சட்டத்தை மதிக்கும் குடிமகனாய் சரியான பாதையில் 2 நிமிடங்கள் செலவழித்து நடக்க வேண்டும்.

இங்கு சட்டத்தை மதிக்கும் குடிமகன்களும் இருக்கிறார்கள். barrier-யை தாண்டிக் குதிக்கும் குடிமக்களும் இருக்கின்றனர்.
ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், டிப்டாப்பாக டிரெஸ் அணிந்து அலுவலகம் செல்லும் பெண்களும் கூட, barrier-யை தாண்டி எகிறிக் குதிப்பதை பார்ப்பது இதுவரையில் இல்லாத ஒன்றாக உள்ளது.
இப்படி வேலைக்கு போகும் பெண்கள், தங்கள் 2 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக தடுப்பை தாண்டி எகிறிக் குதிப்பதை வீடியோ எடுத்து ஒருவர் டிக் டாக்-ல் போட, இப்போது அந்த barrier முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.
எனினும், இந்த அகற்றம் தற்காலிகமானதே என்று தெரிகிறது. விரைவில் அங்கு நிரந்தர தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கு பிறகு எகிறிக் குதிக்கும் வேலைக்கெல்லாம் இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது.