TamilSaaga

உயரும் GST.. சிங்கப்பூரில் “இத்தனை” டாலர் சம்பாதிப்பவர்களுக்கு 6,500 டாலருக்கு பலன் – நம்பிக்கை தரும் அமைச்சர் Wong-ன் அறிவிப்பு

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 7 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வரும் பிப்.18ம் தேதி, பட்ஜெட் 2022 அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

இந்த சூழலில் ஜிஎஸ்டி-யில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ‘திட்டமிட்ட அதிகரிப்பு’ (planned increase) சிங்கப்பூர் மக்களுக்காகவும் மற்றும் சமூக உள்கட்டமைப்புகளிலும் முதலீடு செய்யத் தேவையான வருவாயை ஈட்ட உதவும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (பிப் 9) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வோங் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பேசிய வீடியோவில், “COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து கையாள்வதில் சிங்கப்பூர் ஒரு ‘முக்கியமான நேரத்தில்’ உள்ளது. எதிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த சிங்கப்பூரை உருவாக்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க – பேராசை! சிங்கப்பூரில் தனது சம்பளத்தை அதிகமாக காட்ட payslips-ல் மோசடி – Citibank-யே கிறுகிறுக்க வைத்த “பலே” ஊழியர்

“அவ்வாறு செய்ய, நாம் நமது மக்கள் மற்றும் நமது சமூக உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி அதிகரிப்பு இந்த நோக்கத்திற்காக நமக்குத் தேவையான வருவாயை உருவாக்க உதவும்” என்று அமைச்சர் வோங் கூறினார்.

கூடுதல் வருவாய் சிங்கப்பூரின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளை ஆதரிப்பதோடு மூத்த குடிமக்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ள உதவும் என்றும் அவர் கூறினார்.

ஜிஎஸ்டியை 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக இரண்டு சதவீத புள்ளிகளாக உயர்த்தும் திட்டம், 2018ல் அப்போதைய நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட்டின் பட்ஜெட் உரையின் போது முதலில் அறிவிக்கப்பட்டது.

2021 முதல் 2025 வரை இந்த அதிகரிப்பு ஏற்படும் என்றும், பொருளாதார நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் சரியான நேரத்தை முடிவு செய்ய வேண்டும் என்றும் அப்போது திரு ஹெங் கூறியிருந்தார்.

பொருளாதாரத்தில் COVID-19 இன் தாக்கம் காரணமாக இது கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், பிரதமர் லீ சியென் லூங் தனது புத்தாண்டு செய்தியில், கோவிட் 19-லிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால், பட்ஜெட் 2022 இல் திட்டமிடப்பட்ட உயர்வை நோக்கி அரசு “நகரத் தொடங்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வோங், “ஜிஎஸ்டி அதிகரிப்பின் தாக்கத்தை குறைக்க இடைக்கால நடவடிக்கைகள் இருக்கும். இரண்டு குழந்தைகளுடன் மாதத்திற்கு $5,000 சம்பாதிக்கும் தம்பதிகளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் அஷ்யூரன்ஸ் பேக்கேஜின் (Assurance Package) கீழ் சுமார் S$6,500 பலன்களைப் பெறுவார்கள்” என்று அவர் கூறினார்.

மேலும், “குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சிறப்பாக ஆதரிப்பதற்காக GST வவுச்சர் திட்டத்தை அரசாங்கம் நிரந்தரமாக மேம்படுத்தும். உங்களில் பலர் வாழ்க்கைச் செலவைப் பற்றி கவலைப்படுவதை நான் அறிவேன், அதனால்தான் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீது ஜிஎஸ்டியின் தாக்கத்தைத் தணிக்க ஒரு விரிவான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்” என்று அமைச்சர் வோங் கூறினார்.

மேலும் படிக்க – “தமிழ்னு நேரடியா சொன்ன குறைஞ்சுடுவிங்களா?” : சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளை விமர்சித்த அமெரிக்க youtuber – வச்சு செய்த சிங்கப்பூரர்கள்

பிப்ரவரி 18ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இதுகுறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பட்ஜெட் அறிக்கை சேனல் 5, CNA, CNA938, Capital 958, CNA இணையதளம், CNA YouTube, CNA Facebook, 8 World News, 8 World News YouTube, 8 World News Facebook மற்றும் MediaCorp இன் meWATCH ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நிதி அமைச்சகத்தின் முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்கு மற்றும் சிஎன்ஏவின் இணையதளம், டெலிகிராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் உரையின் முக்கிய அறிவிப்புகளின் Live updates கிடைக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts