TamilSaaga

சிங்கப்பூரில் உணவகங்களில் தளர்வுகள் எப்போது? – இதோ அதற்கான நிபந்தனைகள்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று குறையும் பட்சத்தில் உணவகங்களில் ஐந்து பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண அனுமதி கிடைக்கும் என அமைச்சுகளின் நிலைப்பணிக்குழு கடந்த சனிக்கிழமை (அக்.23) தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கியமாக வாரத்திற்கான கொரோனா தொற்று விகிதமானது 1 க்கு குறைவாக இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனையின் நிலவரம் தொடர்ந்து சீராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேற்கண்ட இந்த நிபந்தனைகளை சூழல்கள் பூர்த்தி செய்யும் போது குழுவாக விளையாடுதல் மற்றும் பள்ளிகளுக்கான செயல்பாடுகளிலும் தளர்வுகள் கிடைக்கும் என நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் இந்த தொற்று பரவும் விகிதம் 1க்கு கீழ் இருந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி தொற்று விகிதமானது ஒன்றுக்கு மேல் உள்ளது என்பதையும் அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Related posts