TamilSaaga

“தமிழகம் முதல் சிங்கப்பூர் வரை” : நவம்பர் மாத ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புக்கிங் தொடங்கியது – Full Details

உலக அளவில் தற்போது மீண்டும் விமான சேவைகள் மீண்டு வருகின்றனர், இன்னும் பெருந்தொற்றின் தாக்கம் 100 சதவிகிதம் மறையவில்லை என்றாலும் தடுப்பூசிகளால் மக்களிடம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல திருச்சி, சென்னை மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் கோழிக்கோட்டில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான விமான பட்டியலை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த நவம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோழிக்கோட்டில் இருந்து திருச்சி மார்கமாக சிங்கப்பூருக்கு 11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமானங்கள் செல்லவுள்ளது. மேலும் திருச்சியில் இருந்து 8,9,11,15,16,18,22,23,25,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கான முன்பதிவுகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts