TamilSaaga

“என் புருஷன், புள்ளைங்களே என்னை வெறுக்குறாங்க”.. சிங்கப்பூரில் அலட்சிய குணத்தால் 20,000 டாலரை இழந்த அப்பாவி பெண் – “Google Search” மூலம் “விபூதி” அடித்த ஆசாமி

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் திருமதி.வோங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்கு அழகு நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது மொபைலில் உள்ள Grab app-ன் auto top-up செயல்பாட்டில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பதாக அந்த Grab app Notification அனுப்பியிருந்திருக்கிறது.

அந்த தகவலில், வோங்கின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த Notification ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அவருக்கு வந்திருக்கிறது.

ஆனால், GrabPay வாலட் தனது Maybank கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது அப்பெண்ணுக்கு தெரியும். எனவே, அவர் தனது Maybank கணக்கைச் சரிபார்க்க, அதில் அவரது பணம் பத்திரமாக இருந்திருக்கிறது.

இருந்தாலும், தொடர்ந்து அந்த GrabPay ஆப் மூலம் தொடர்ந்து ‘உங்கள் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லை’ என்று மெசேஜ் வந்து கொண்டு இருந்ததால், அதனை தடுக்கலாம் என்று முடிவு செய்த வோங், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பிரச்சனையைத் தீர்க்க சிறிது நேரம் ஒதுக்கினார்.

தனது மொபைலில் Maybank’s customer service number குறித்து அவர் ‘Google Search’ செய்ய, ஒரு நம்பர் முதலில் தோன்றியிருக்கிறது. அது தான் Maybank’s customer service number என்று நினைத்த வோங், அந்த நம்பருக்கு கால் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் மார்ச் 31க்குள்… Work Permit மற்றும் S-Pass வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான “முக்கிய” அறிவிப்பை வெளியிட்ட MOM

மறுமுனையில் ஃபோனை எடுத்தவர் தன்னை Maybank-ல் பணிபுரியும் “Freddy Heng” என்று சொல்லி இருக்கிறார். இதுகுறித்து CNA-விடம் பேசிய திருமதி வோங், “அந்த நபர் அவ்வளவு Professional-ஆக பேசியதாகவும், தனது பிரச்சனைகளைக் கேட்டு அதற்குரிய சரியான கேள்விகளை அவர் கேட்டதாகவும்” கூறினார். அதாவது, troubleshoot-காக அந்த நபர் கேட்ட கேள்விகள் அனைத்தும் அவ்வளவு தெளிவாகவும், நேர்த்தியாகவும், பிரச்னையை தீர்த்து வைக்கக் கூடிய அளவில் இருந்ததாகவும் வோங் கூறினார்.

இதனை நம்பிய வோங் தனது பெயர், முகவரி, பிறந்த தேதி, mail-id மற்றும் Maybank கணக்கு திறக்கப்பட்ட கிளை என்று சகலத்தையும் கொடுத்திருக்கிறார்.

“ஒரு தேர்ந்த Maybank ஊழியர் எப்படி பேசுவாரா, அத்தனை கச்சிதமாக அவரது பேச்சு இருந்தது” என்று வோங் கூறினார்.

பிறகு பேசிய அந்த நபர், இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனில் ‘உங்கள் பணத்தை வேறொரு Maybank அக்கவுண்ட்டுக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

வோங்கும் ‘சரி’ என்று சொல்ல, Freddy Heng எனும் அந்த நபர், SMS மற்றும் email மூலம் மற்றொரு அக்கவுண்ட் விவரங்களை அனுப்பியிருக்கிறார்.

அவர் அனுப்பிய மெசேஜ்-கள், இதற்கு முன்பு வோங்கிற்கு ஒரிஜினலான Maybank வங்கி OTP-க்கள் அனுப்பிய அதே thread-ல் வந்து சேர்ந்திருக்கிறது. அச்சு அசல், Freddy Heng அனுப்பிய மெசேஜ் Maybank அனுப்பிய மெசேஜ் போலவே இருந்தது. ஒரு எழுத்துப் பிழை கூட இல்லை. அதில், ஒரு புது கணக்கு வோங்கின் பெயரிலேயே இருந்தது. அந்த புது கணக்கிற்கு தான் Freddy Heng பணத்தை அனுப்ப சொல்லியிருக்கிறார்.

இதனால் எந்த சந்தேகமும் வராமல் போக, திருமதி வோங், தனது வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு S$19,000 அனுப்பினார். உடனே மீண்டும் அழைத்த Freddy Heng, பணம் அந்த கணக்கிற்கு வந்து சேர்ந்து விட்டது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனவே, பிரச்சனை முடிந்தது என்று நினைத்த வோங், தனது வழக்கமான பணியை பார்க்க சென்றுவிட்டார்.

மேலும் படிக்க – “நான் ஒரு ஓரமாதான நிப்பாட்டுனேன்” : சிங்கப்பூர் தியோங் போ சாலையில் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து? – Video உள்ளே

இருந்தாலும் ஏதோ ஒரு சந்தேகம் அவருக்கு ஏற்பட, அவரது உள்ளுணர்வும் ‘என்னமோ ஒன்னு சரியில்ல’ என்பதை மீண்டும் மீண்டும் எச்சரிக்க, Freddy Heng அளித்த மற்றொரு வங்கிக் கணக்கு என்னுடையது தானா? அல்லது என் பெயரில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒரு போலி அக்கவுண்ட்டா? என்று மீண்டும் ஒரு முறை சரிப்பார்க்க நினைத்தார்.

மாலை வீட்டுக்கு வந்த வோங், மீண்டும் Google Search செய்த போது, இம்முறை முதலில் தோன்றிய.. அதாவது top result-ல் தோன்றிய Maybank வங்கியின் Customer Care எண் வேறு நம்பராக இருந்தது. உடனே வோங் அந்த நம்பருக்கு அழைக்க, இப்போது உண்மையான Maybank ஊழியர் பேசினார். அவரிடம் ‘முன்பு வேறு நம்பர் இருந்ததே’ என்று கேட்ட வோங், நடந்த சம்பவம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி இருக்கிறார்.

அனைத்தையும் கேட்ட அந்த Maybank ஊழியர், “மேடம், அது போலி நம்பர்” என்று சிம்பிளாக பதில் அளித்திருக்கிறார். பதறிய வோங், தனக்கு நடந்தவற்றை விளக்கமாக சொல்ல முயற்சித்த போது, அந்த ஊழியர், ‘இது உங்கள் தவறு மேடம். நீங்கள் போலீசிடம் சென்று புகார் அளியுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

அன்று மாலையே காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, மறுநாள் காலை முதல் வேலையாக வங்கி சென்ற வோங், “உங்களால் முடிந்த அளவு ஏதாவது உதவி செய்ய முடியுமா?” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் முற்றிலும் கைவிரிக்க, “நான் என்னை நினைத்தே வெறுப்படைகிறேன். அவ்வளவு “முட்டாள்தனமாக” அலட்சியமாக இருந்துள்ளேன். அதைவிட வேதனை என்னவெனில், Maybank வங்கி முற்றிலும் இந்த விவாகரத்தில் “எனக்கென்ன” என்பது போல் இருந்தது தான்” என்று வருத்தமுடன் வோங் தெரிவித்துள்ளார்.

பிறகு திருமதி வோங் போலீசாரிடம் புகார் அளித்த பிறகு தான், Google searches-களில் இதுபோன்ற போலி விளம்பரங்கள் மூலம், குறைந்தது 15 பேராவது பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. குறைந்தபட்சம் S$495,000 தொகையை கடந்த டிசம்பர் முதல் நடத்தப்பட்ட மோசடியில் இழந்திருக்கலாம் என்று தெரிகிறது.

“வோங்கின் புகாரைத் தொடர்ந்து, Maybank வங்கியும் போலீஸ் புகாரைப் பதிவு செய்துள்ளது. மேலும் இதுபோன்ற மோசடி தொலைபேசி எண்ணைத் Block செய்வது தொடர்பாக Infocomm Media Development Authorityக்கும் வங்கி சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்” : மாற்றி அமைக்கப்படும் SHN மற்றும் Onboarding Arrangements – Update செய்யப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகள்

ஆனால், அவரது பணத்தை முழுவதும் மீட்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் வோங் இப்போது வரை தனது பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். “பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. அட்லீஸ்ட் மோசடி செய்த நபரையாவது கைது செய்தால் போதும்.. அதுவே எனக்கு நிம்மதி தான்” என்று CNA-விடம் வோங் வேதனையுடன் தெரிவித்தார்.

“வங்கிக் கணக்கு தொடர்பாக எந்த சிக்கலாக இருந்தாலும், நேரடியாக வங்கிக்கு சென்றுவிடுங்கள். அதனால் உங்களுக்கு சற்று அதிகம் நேரம் செலவாகலாம். ஆனால், நீங்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். இதுதான் நான் மற்றவர்களிடம் வைக்கும் விண்ணப்பம்.

பணத்தை தொலைத்த பிறகு, என் கணவரும், மகளும் என்னை மிகவும் நொந்து கொண்டதாக கூறிய வோங், என் அன்புக்குரியவர்கள் கூட, எனக்காக பச்சாதாபம் கொள்ளவில்லை. அவர்கள் என்னை கேலி செய்தார்கள். நான் அவ்வளவு கூனிக் குறுகி நின்றேன்” என்று வேதனையுடன் கூறினார்.

iஇறுதியில், “எங்கள் ஹாட்லைன் எண் 1800 ஆகும். இது MAYBANK சிங்கப்பூர் இணையதளம், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் எங்கள் கார்டுகளின் பின்புறம் இருக்கும்.” என்று Maybank வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Source: CNA/hz(cy)

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Related posts