கோவில் சொத்துக்கள் அபகரிப்பு, கோவில் நகைகள் திருட்டு என்பது நம்மூரில் நாம் அடிக்கடி கேட்கும் செய்தி தான். ஆனால் சிங்கப்பூருக்கு இது மிகவும் புதிதான செய்தி. அதையும் செய்தது நம் தமிழர் தான் என்று நினைக்கும் பொழுது உண்மையில் வேதனை அளிக்கும் விஷயம்தான்.
சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலுக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. தமிழகத்தின் கடலூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்களால் 1827 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயில் தான் மாரியம்மன் கோவில். சிங்கப்பூரின் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றான இது நாராயண பிள்ளை என்பவரின் தலைமையில் கட்டப்பட்டதாகும்.
இந்த கோவிலை சிங்கப்பூரின் நினைவுச் சின்னமாக கூட அந்நாட்டின் அரசு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடமுழுக்கு நடைபெற்ற பொழுது கூட தமிழர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான சீனர்களும் இந்த கோவிலின் கலந்துகொண்டு உணவருந்தினார்கள்.
பொதுவாக சிங்கப்பூரில் உள்ள பல இந்திய கோவில்களில் தமிழக பூஜாரிகள் பல சிறப்பாக தொண்டு செய்து வருகின்றார்கள். இன்னும் சொல்ல போனால் நம்மூரில் இருப்பதை விட பல மடங்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் ஆலயங்கள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூரின் பழமையான மாரியம்மன் கோயிலில் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கந்தசாமி சேனாதிபதி என்பவர் கோவிலின் தலைமை பூசாரிக பணிபுரிந்து வருகின்றார். அவர் பணி புரியும் காலகட்டத்தில் ஐந்து முறை கோவில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் தெரியவந்தது.
கிட்டத்தட்ட அவர் 15 லட்சம் டாலருக்கு கோவில் நகங்களை அடகு வைத்து பணம் பெற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. முதலில் நகைகளை அடகு வைக்கும் கந்தசாமி கையில் பணம் புரண்ட பிறகு மீண்டும் நகையினை மீட்டு கோவிலில் வைத்து விடுவதாக தெரியவந்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் அவரால் போதிய அளவு பணம் ஈட்ட முடியவில்லை என்னும்போது நகையை மீட்க முடியாமல் மாட்டிக் கொண்டார். 194 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயிலில் இது போன்ற சம்பவம் இதுவரை நடைபெறவே இல்லை என்பதே உண்மை.
கோவில் நிர்வாகம் அடிக்கடி கோவிலில் உள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகள் குறித்து ஆய்வில் ஈடுபடுவது வழக்கம். அப்பொழுது ஆய்வில் ஈடுபட்டபோது அவர் செய்த தவறு அம்பலமாகி கந்தசாமியின் பூஜாரி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.
மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கந்தசாமி கைது செய்யப்பட்டார். தற்பொழுது இந்த வழக்கானது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருவதை ஒட்டி பூஜாரி முறை கேட்டில் ஈடுபட்டதை தானாகவே ஒப்புக்கொண்டார்.
எனவே சமீபத்தில் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கி கந்தசாமிக்கு 6 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை வழங்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.