TamilSaaga

“தொடங்கியது சிங்கப்பூரின் VTL திட்டம்” : 750 வெளிநாட்டவருக்கு சிங்கப்பூர் வர அனுமதி – முழு விவரம்

உலக அளவில் உள்ள தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூர் பல நாடுகளுக்கு தன்னுடைய எல்லைகளை முடியாது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 8ம் தேதி முதல் VTL திட்டத்தின் கீழ் ஜெர்மனி மற்றும் புருனே ஆகிய நாடுகளில் இருந்து மக்களை சிங்கப்பூருக்குள் வர அனுமதி அளித்துள்ளது சிங்கப்பூர் அரசு. இந்நிலையில் இன்று முதல் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பங்கள் திறந்த முதல் நாளில், தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான புதிய திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் நுழைய 750 பேர் ஒப்புதல் பெற்றுள்ளனர். சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 1) இரவு 11.59 மணி நிலவரப்படி, ஜெர்மனியைச் சேர்ந்த 735 பயணிகள் (301 குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் 434 நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள்) VTL எனப்படும் தடுப்பூசி பயணப் பாதை வழியாக பயணப் பாஸ் பெற்றுள்ளனர்.

இதேபோல், புருனேயில் இருந்து 20 பயணிகள் ஒப்புதல் பெற்றுள்ளனர். இதில் 18 பேர் குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் இரண்டு நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் அடங்குவர். இந்த பயணிகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் சிங்கப்பூருக்குள் நுழைய பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த புதன்கிழமை (அக்டோபர் 8) ஜெர்மனியில் இருந்து முதல் VTL விமானம் சிங்கப்பூர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புருனேயில் இருந்து வரும் முதல் விமானம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வியாழக்கிழமை அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts