நமது சிங்கப்பூரின் MOM சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தடுப்பூசி போடப்பட்ட நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கான நுழைவு அனுமதித் தேவைகள் பிப்ரவரி 21 முதல் விலக்கிக் கொள்ளப்படும் என்று கூறியது.
அதாவது, VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதியுள்ள பாஸ் வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதிக்கு (Entry Approval) விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆனால் அதே நேரத்தில் நடைமுறையில் உள்ள நுழைவுத் தேவைகள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை அவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த புதிய நடவடிக்கை, இன்று (பிப்.21) நள்ளிரவு 11:59க்கு பிறகு அமலாகிறது. பிப்.22 நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலாகிறது. வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும்.
கடந்த மார்ச் 2020 முதல் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களும் ஒப்புதல் பெற வேண்டும். இது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுப்புகளில் ஒன்று. சுமார் 2 வருட காலத்திற்கு பிறகு தற்போது பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவரும் சரியான நேரத்தில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
தற்போது (பிப்ரவரி 21க்கு பிறகு) Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் நுழைய நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. MOM அறிக்கையின் படி, Work Permit Holders இந்த திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்படவில்லை.
“வேலை அனுமதி வைத்திருப்போர்” அதாவது Work Permit Holders தவிர முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட Long Term Pass holders அதாவது EP எனப்படும் Employment Pass, Dependent’s pass அல்லது S Pass வைத்திருப்பவர்கள் மட்டும் நாளை முதல் நுழைவு அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் வர முடியும் என்று MOM கூறியுள்ளது.
பெருந்தொற்று இன்னமும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது சிங்கப்பூர் அரசின் இந்த தளர்வு அறிவிப்பு, பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓரளவுக்காவது நம்பிக்கையை, ஆறுதலைக் கொடுத்துள்ளது. Work Permit Holders வர முடியாதது வருத்தம் தான் என்றாலும், அரசின் இந்த தளர்வே ஒரு முக்கியமான நகர்வாக தான் பார்க்க வேண்டும். மிக விரைவில் Work Permit Holders சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.