சிங்கப்பூரில் வேலைக்காக வரும் ஊழியர்கள் அனைவருக்குமே கேட்கப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது security bond. இந்த பாண்ட் குறித்து நீங்கள் தெரிந்து கொண்டால் அது உங்களுக்கு ரொம்ப உதவியாகவே இருக்கும்.
சிங்கை ஊழியர்கள் அனைவருக்கும் எடுக்கப்படும் security bondஐ அவர்கள் வேலை செய்யும் கம்பெனி தரப்பில் இருந்து 5000 சிங்கப்பூர் டாலர் மதிப்பில் எடுக்கப்பட வேண்டும். சிங்கப்பூரின் விதியை மீறாமல் பார்த்து கொள்வதே அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் பிணை உறுதிமொழி பத்திரம். இதை தான் security bond என்கிறார்கள். மலேசியன் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர் பெயரில் இந்த பாண்ட் கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: பிழைப்புக்காக சிங்கப்பூர் வந்த ஊழியர்… திடீரென மாரடைப்பு… மொத்த வாழ்க்கையும் படுக்கை… நாடு திரும்ப நன்கொடை கொடுத்த மக்கள்… ஆனால் நிகழ்ந்த சோகம்!
Security bond கண்டிப்பாக வொர்க் பெர்மிட் ஊழியர்களுக்கு மட்டும் தான். s-pass மற்றும் e-passல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இது தேவைப்படாது. $5000 சிங்கப்பூர் டாலர் கொடுத்து சிங்கப்பூர் வங்கி அல்லது இன்சூரன்ஸ் கம்பெனியில் இதை கம்பெனி தரப்பில் இருந்து வாங்க வேண்டும். ஆனால் இதற்கு ஊழியர்களிடம் இருந்து எந்தவித தொகையை கேட்கப்படக் கூடாது. பொதுவாக நிறுவனங்கள் ஊழியர்களின் கையில் ஒரு வாரத்திற்கு முன்னர் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் தான் கையில் security bond கொடுக்கப்பட்டு வருகிறது. IP வந்தவுடன் கம்பெனி தரப்பில் security bond வரும் தேதியை குறித்து கேட்டுக்கொண்டு டிக்கெட் போடுவது நல்லது. இதையே சிங்கை MOM ஊழியர்களுக்கு இந்த பாண்ட் மூன்று நாட்களுக்கு முன்னரே போக வேண்டும் எனக் கூறுகிறது. இருந்தும், இந்த விதி இன்னமும் பின்பற்றப்படுவது இல்லை.
இதையும் படிங்க: உங்களை “பிரமிக்க” வைக்கும் சிங்கப்பூர் MRT-ன் 6 வழித்தடம்.. அதுவும் “தமிழில்” கிடைக்கும் துல்லியமான “MRT Map”
வேலை செய்து வந்த ஊழியர் வொர்க் பெர்மிட் கேன்சல் செய்யப்பட்டு நாடு திரும்பினாலோ, சிங்கப்பூர் நாட்டின் எந்த சட்டத்தினையும் அந்த ஊழியர் மீறாமல் இருந்தாலோ இந்த பாண்ட் நடைமுறையில் இருந்து நாட்டை விட்டு சென்ற ஒரே வாரத்தில் நீங்கள் வெளியேறி விடலாம்.
ஊழியர்களுக்கு நிறுவனம் சரியாக சம்பளம் கொடுக்கப்படாமல் இருந்தாலோ, வொர்க் பெர்மிட் முடிந்தும் ஊழியர்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்ற நிறுவனம் தவறினாலோ, சிங்கப்பூரின் எந்த விதிகளையாவது நீங்கள் மீறினாலோ, கம்பெனியில் இருந்து ஊழியரெ காணாமல் போனாலோ இந்த security bondஐ MOM தரப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு விடும்.
இந்த security bond நடைமுறை s-pass மற்றும் e-passக்கு கிடையாது. வொர்க் பெர்மிட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் தான். s-passல் வரும் சிங்கை ஊழியர்களுக்கு மெடிக்கல் இன்சுரன்ஸ் மட்டுமே நிறுவனத்தால் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.