TamilSaaga

நிறைய Job Apply செய்தும் கம்பெனிகளிடமிருந்து பதில் வரவில்லையா? இனி இந்த வழியில் Job தேடுங்க!

நீங்க இப்போ தான் படிப்பு முடிச்சு இருக்கிறீங்களா அல்லது புதுசா வேலைக்கு சேர நினைக்கிறீங்களா! உடனே வேலைக்கு select ஆக பல Tricks இருக்கு. அத தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படியுங்க.

பொதுவா எல்லாரும் பண்ற காரியம் ஏதாவது வேலை வாய்ய்பு விளம்பரத்தை பார்த்தல், உடனே அதுக்கு விண்ணப்பிப்பது. அதனுடைய முழு விவரங்களையும் தெரிஞ்சுக்காம, வேலையின் பெயரை மட்டும் பார்த்து உடனே விண்ணப்பம் செய்வாங்க. பிறகு காத்திருந்து காத்திருந்து காலம் கழிவது தான் மிச்சம்.

நீங்களும் இதே தப்பை செய்யாதீங்க. ஒரு அலுவலகம் வேலைக்கு ஆட்களை எடுக்க முக்கியமான தேவை அவங்களுடைய Profile. அது சரியா இருந்தா அவங்களை அட்ராக்ட் பண்ற மாதிரி இருந்தா தான் உங்களுக்கு அழைப்பு வரும். அதனால முதல்ல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் உங்க profile.

அதை மிக கச்சிதமா உருவாக்கனும். அதுக்கு முதல்ல உங்களைப் பற்றிய சரியான புரிதல் உங்களுக்கு வேண்டும். உங்களுடைய தனித்துவமான திறமைகள், பலம், பலவீனம் என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பது அவசியம். மேலும் உங்கள் துறை சார்பா ஏதாவது certification courses படிச்சு இருந்தீங்கன்னா அது இன்னும் பிரயோஜனமா இருக்கும். அதை விட மிக முக்கியம் அடுத்த சில வருடங்களுக்கு உங்க career ல நீங்க என்னவா ஆகணும்னு ஒரு திட்டம் வச்சுக்கோங்க. அதற்க்கு தகுந்த மாதிரி தான் உங்க வேலையை அமச்சுக்கணும்.

அடுத்ததா உங்க Profile. மேலே சொன்ன அனைத்தையும் மனசுல வச்சுக்கிட்டு உங்க சுய விவரத்தை(Profile) தயார் பண்ணுங்க. அதிகப்படியான தகவல்களைப் போட்டு bore அடிக்காம, எது முக்கியமோ அதை மட்டும் தெரியப்படுத்துங்க. குறைவான தகவல் இருந்தாலும், சொல்ல வரத தெளிவா சொல்லுற மாதிரி உங்க Profile இருக்கனும். அதாவது உங்கள் கல்வி, அனுபவம், தொடர்பு கொள்ள தேவையான தகவல் மற்றும் உங்கள் திறன் சார்ந்த தகவல்களை மட்டும் கொடுத்தால் போதுமானது.

உங்கள் வேலையைக் குறித்த தகவலை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள். வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்தவுடன் விண்ணப்பிக்காமல், அதனைக் குறித்த முழு தகவல்களையும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வேலையின் பொறுப்புகள், அதற்க்கு தேவையான அனுபவங்கள், வேலையின் எதிர்காலம் போன்றவற்றை ஆராய வேண்டும். அதனுடன் உங்களுடைய Profile ஒத்துப்போகிறதா என்பதை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

அடுத்ததாக அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் எதிர்காலம், வேலை முறைமைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இப்பொழுது உள்ள கால கட்டத்தில் பெரும்பான்மையான பணியாளர்களுடன் LinkedIn மூலம் நீங்கள் பேச முடியும். அப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நிறுவனத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அல்லது நிறுவனத்தைப் பற்றி பணியாளர்களின் Review-களைப் பார்வையிடுங்கள். சரியான வேலையோடு கூட சரியான நிறுவனத்தையும் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.

வேலை வாய்ப்பு தளங்களில் உங்களின் சுய விவரத்தைப் பதிவிடுங்கள்.
Indeed, LinkedIn போன்ற பிரபலமான வேலை வாய்ய்பு தளங்களில் உங்கள் சுய விவரத்தைப் பதிவிடுங்கள். தொடர்ந்து அதனை பார்வையிட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது தான் உங்களுக்கான சரியான வேலை வரும்பொழுது உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பித்த பிறகு உங்களுக்கான அழைப்பு வரும்பொழுது நேர்காணலுக்கு தயாராக இருத்தல் வேண்டும். பணியாளர்களிடம் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான Quality Confidence! அனைத்தையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் திறன் அனைவருக்கும் இருக்க வேண்டும். எனவே நேர்காணலின் பொழுது அனைத்து கேள்விகளுக்கும் தன்னபிக்கையோடு பதிலளித்திடுங்கள்.

மூன்று காரியங்களை முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதல் காரியம் உங்கள் Profile சரியாகவும் நிறுவன அதிகாரிகளை கவனிக்க வைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தேவையற்ற தகவலை தவிர்த்திடுங்கள். அடுத்ததாக உங்கள் வேலை மற்றும் அதன் எதிர்காலத்தைக் குறித்து நன்கு அறிந்து விண்ணப்பித்திடுங்கள். உங்கள் நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்கள் அல்லது வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள Review-க்கள் போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ள முயலுங்கள்.

இவை அனைத்தையும் சரியாக செய்த பின்னர் நேர்காணலை தன்னம்பிக்கையோடு சந்தித்திடுங்கள்! அப்பறம் என்ன வேலை உங்களுக்குத் தான்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts