TamilSaaga

அழுது அழுது வற்றிய கண்ணீர்.. சென்ற வருடம் தம்பியின் மரணம்… துக்கத்தோடு சிங்கப்பூரில் பணியாற்றிய அண்ணன் மகேஷும் பணியிடத்தில் பலி – அடுத்தடுத்து 2 மகன்களை இழந்து நிற்கும் பாவப்பட்ட குடும்பம்!

SINGAPORE: சிங்கப்பூரில் கடந்த ஜுலை.7ம் தேதி உயிரிழந்த ஊழியர் பெயர் மகேஷ் என்பதும் அவரது இதர தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளது.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போன்று இருப்பதில்லை. சிலருக்கு அள்ளியும், பலருக்கு கிள்ளியும் கொடுப்பதே அதன் இரக்கமில்லா குணத்துக்கு சான்று. பணம், காசு கூட பெரிய பிரச்சனையில்லை.. ஆனால், குடும்பத்தில் இருக்கும் நிம்மதி, மகிழ்ச்சியை குலைக்கும் மரணம் போன்ற நிகழ்வுகள்.. அதுவும் வாழ வேண்டிய வயதில் ஏற்படும் மரணத்தை கொடுத்து, அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையே சிதைப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

அப்படியொரு கொடுமை தான் இங்கு ஒரு குடும்பத்துக்கு அரேங்கேறியுள்ளது. சிங்கப்பூரின் Choa Chu Kang பகுதியில் உள்ள ஒரு Build-To-Order (BTO) திட்ட பணியிடத்தில் கடந்த (ஜூலை 7) forklift விபத்தில் ஒரு இந்திய கட்டுமானத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சகம் (MOM) கூறுகையில், 571-யூனிட் கீட் ஹாங் வெர்ஜ் BTO Project அமைந்துள்ள கீட் ஹாங் லிங்கில் (Keat Hong Link) Site-ல் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டது.

forklift வாகனத்தின் பின்புற counterweight-ல் நின்று கொண்டு, overhead beam-ல் மின் கேபிளை அந்த ஊழியர் கட்டிக் கொண்டிருந்த போது, திடீரென அந்த வாகனம் பின்னோக்கி நகர்ந்துவிட்டது. இதில், forklift-ன் Canopy மற்றும் beam-க்கு இடையில் அந்த ஊழியர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 4 ஆண்டுகள் ஏறி இறங்காத கம்பெனி இல்ல.. ஒருத்தரும் வேலை கொடுக்கல – கைவிடாத நட்பால் இன்று தடைகளை தகர்த்து சாதித்த பெண்!

சிங்கப்பூரின் Mega Engineering நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த இந்திய ஊழியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதை நேற்றே தமிழ் சாகாவில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அவரது பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், இறந்த ஊழியரின் உறவினர் தமிழ் சாகாவை தொடர்பு கொண்டு, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், “சிங்கப்பூரில் கடந்த ஜுலை 7ம் தேதி உயிரிழந்த ஊழியரின் பெயர் மகேஷ். அவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மகேஷுக்கு சதீஷ் என்ற ஒரு அண்ணன் உள்ளார். அதேபோல், பிரகாஷ் என்ற ஒரு தம்பியும் இருந்தார். கடந்த ஆண்டு, சொந்த ஊரில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பிரகாஷ், மின் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் உயிரிழந்த ஊழியர் மகேஷ்

அந்த துக்கத்தில் இருந்த இன்னும் அவரது குடும்பம் மீளவில்லை. அவரது தம்பி பிரகாஷ் இறந்து ஓராண்டிலேயே, மகேஷ் இப்போது சிங்கப்பூரில் பணியிடத்தில் சிக்கி இறந்துவிட்டார். அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு மகன்களை பறிகொடுத்து அந்த குடும்பம் நிர்கதியாய் நிற்கிறது. அழுது அழுது கண்ணீரும் இப்போது மிச்சமில்லை.

இந்த 2022 வருடத்தின் இறுதியில் மகேஷுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் பார்த்து வந்தனர். ஆனால், அதற்குள் மகேஷ் எங்கள் எல்லோரையும் விட்டு போய்விட்டார்” என்று உருக்கமுடன் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts