TamilSaaga

கடைசி நேரத்தில் முன்பதிவு களைகட்டியது – சிங்கப்பூர் உணவு மற்றும் பானக் கடைகளில் சுவாரசியம்

சிங்கப்பூரில் இன்று (ஜீலை.22) முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக High Alert கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் கடைசி நேரத்தில் நேற்று (ஜீலை.21) மற்றும் முந்தைய நாட்களில் பெருமளவில் உணவு மேசைகளை சாப்பிட மக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

SF Group லோராங் சுவானில் உள்ள கிளை 7 உணவகம் பிற்பகல் 2 மணியளவில் சுமார் 70 சதவீதம் நிறைந்து இருந்ததாகவும் அதிக அளவில் முன்பதிவுகள் வந்த வண்ணம் இருந்ததாகவும் திரு. கோலின் ஹோ (Chief Executive) தெரிவித்துள்ளார்.

மிச்செலின் மூன்று நட்சத்திர அந்தஸ்துள்ள பிரெஞ்சு உணவகங்களின் கடைகளில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட முன்பதிவுகளை முன்னோக்கி நகர்த்த முயற்சித்ததாகவும் ஆனால் கடந்த இரண்டு நாட்களிலுமே உணவகம் நிரம்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு மேற்கத்திய உணவு கடையில் (Western fine-dining restaurant Zen) வெள்ளி மற்றும் சனிக்கிழமை மதிய உணவுக்கு திட்டமிட்டதாகவும் அதனுடைய 20 மேஜைகளுமே முன்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதைபற்றி அதன் மேலாளர் ஜேக்கப்சன் கூறும்போது, ” நேற்று மாலை 5 மணி நிலவரப்படி முன்பதிவு எதுவும் இல்லை ஆனால் இரவு 9 மணியளவில் அட்டவணைப்படி அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது” என்று கூறினார்.

இப்படி சிங்கப்பூரின் உணவு மற்றும் பானக்கடைகளின் முன்பதிவுகள் நேற்றும் கடந்த சில தினங்களிலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இன்று முதல் உணவகத்தில் அமர்ந்து உண்ண முடியாது என்ற நிலையில் மக்கள் கடைசி நேரத்தில் முன்பதிவு செய்ததை பல கடைகளும் அவை சார்ந்தவர்களும் சுவாரசியமாக பகிர்ந்து உள்ளனர்.

Related posts