சிங்கப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 16) உணவு விநியோகம் செய்பவர் குடிபோதையில் அல்லது வண்டி ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தி அதனால் கவனம் சிதறி இரண்டு பாதசாரிகள் மீது மோதிய குற்றத்திற்காக ஒன்பது வார சிறைத் தண்டனையும் 1,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான Tian Wei Jie தன் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்: ஒரு மோசமான செயலால் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் நடைபாதையில் மின்சார சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்கள் அதில் அடங்கும் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தியான் முதலில் ஃபுட்பாண்டாவில் உணவு விநியோக ரைடராக பணியாற்றினார்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் நாடாளுமன்றம் அருகே விபத்து
அவர் கடந்த ஜூலை 7, 2019 அன்று மாலை பெடோக் சவுத் அவென்யூ 1-ல் உள்ள நடைபாதையில் மணிக்கு 19 கிமீ முதல் 22 கிமீ வேகத்தில் சவாரி செய்து கொண்டிருந்தார் என்றும், அவர் தனது வேலை ஒதுக்கீடு குறித்த தகவலுக்காக தனது கைபேசியைப் பார்த்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சரியான கண்காணிப்பை சாலையின் மீது வைக்காமல், அங்கு நடந்து சென்ற 77 வயது முதியவர் மீது மோதியுள்ளார். அந்த நபர் கீழே விழுந்த அதிர்ச்சியில் ஒரு வகையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அத்துடன் அவரது மண்டையில் இரத்தப்போக்கு ஏற்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/saagatamil
அந்த முதியவருக்கு அவருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது மற்றும் 102 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அவருடைய குடும்பத்திற்கு மருத்துவக் கட்டணமாக 46,557 வெள்ளி ஆனது, அவருடைய காப்பீட்டுக் கொடுப்பனவுகள் மற்றும் மெடிஷீல்ட் மற்றும் மெடிசேவ் ஆகியவற்றால் அது முழுமையாகச் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தியான் கைது செய்யப்பட்டார், ஆனால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் கிராப்ஃபுட் நிறுவனத்தில் பணிபுரிந்தார் மற்றும் இந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி பெடோக் நார்த் ஒரு காபி கடையில் சில நண்பர்களைச் சந்தித்துள்ளார். அங்கு அவர் ஆறு 750 மில்லி பாட்டில்கள் பீர் குடித்தார் என்று கூறப்படுகிறது. குடிபோதையில், அவர் தனது மின் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வழியில், தனது மனைவியுடன் பெடோக் வடக்கு தெரு 3 வழியாக நடைபாதையில் நடந்து கொண்டிருந்த 60 வயது முதியவர் மீது மோதினார். மேலும் அந்த நபரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.