TamilSaaga

பிரான்ஸ் நாட்டின் Occitanie பகுதி : மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சகம் – என்ன பிரச்சனை?

தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து பரவியதாகக் கருதப்படும் பீட்டா வகை கிருமித்தொற்று தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிருமி பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் மக்களின் எண்ணிக்கையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சி தரும் தகவலாக வெளியாகி உள்ளது.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள Occitanie என்ற அந்த பகுதியில் தான் கடந்த மாதத்தில் மட்டும் புதிதாக பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

150கும் அதிகமான மக்கள் இந்த பகுதியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் சுகாதார பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் போராட்டங்களின் மூலம் தொற்று பரவும் அபாயமும் உள்ளது அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது.

Related posts