TamilSaaga

“சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” : இரண்டு ஆண்டு தடை நீங்கியது – மீண்டும் பறக்கும் போயிங் 737 மேக்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் விண்ணில் பறக்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. SIA இன்று செவ்வாயன்று (நவம்பர் 16) தனது ஆறு விமானங்கள் – இப்போது 737-8 என மறுபெயரிடப்பட்டுள்ளது என்றும் “வரும் வாரங்களில்” தேசிய கேரியரின் நெட்வொர்க் முழுவதும் குறுகிய முதல் நடுத்தர தூர விமானங்களில் படிப்படியாக சேவைக்கு வரும் என்று அறிவித்தது.

“புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இடங்களுக்கு உள்ள சேவைகள் இதில் அடங்கும். இது ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டது. “இந்த விமானங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று SIA கூறியது.

இதையும் படியுங்கள் : 34 சதவிகிதம் அதிகரித்த பயணிகள் பயன்பாடு – SIA சொல்லும் Good News

கடந்த மார்ச் 2019ல், சிங்கப்பூர் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) முன்னாள் 737 Max விமானத்தில் சில மாதங்களுக்குள் இரண்டு தனித்தனி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அந்த விமானத்தை இடைநீக்கம் செய்தது என்பது நினைவுகூரத்தக்கது. அக்டோபர் 2018ல், லயன் ஏர் 737 மேக்ஸ் 8 ஜெட் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 189 பேர் மாண்டனர். மார்ச் 2019ல், அதே மாதிரி விமானம் சம்பந்தப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்தில் 157 பேர் மாண்டனர்.

தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/saagatamil

இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பரில், கடந்த ஒன்பது மாதங்களில் விமானத்தின் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அதன் பாதுகாப்புப் பதிவை மதிப்பீடு செய்து, “குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் இல்லை” எனக் கண்டறிந்த பின்னர், சிங்கப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் பறக்கும் 737 மேக்ஸ் மீதான இடைநீக்கத்தை நீக்கியதாக CAAS கூறியது.

Related posts