TamilSaaga

புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மேம்பட்ட மருத்துவ பரிசோதனை – மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி 2021 முதல் (6ME) எனப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஆறு மாத மருத்துவ பரிசோதனையானது மேம்படுத்தப்படும். துஷ்பிரயோக வழக்குகளுக்கு எதிரான கண்டறிதலை வலுப்படுத்த மேம்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

தற்போது 6ME எனப்படும் ஆறு மாத மருத்துவ பரிசோதனையானது​ கர்ப்பம் மற்றும் தொற்று நோய்களுக்காக வழங்கப்பட்டது. தற்போது சுகாதார அமைச்சகம் (MOH), சிங்கப்பூர் குடும்ப மருத்துவர்கள் கல்லூரி (CFPS), சிங்கப்பூர் மருத்துவ சங்கம் (SMA), முதலாளிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகமைகள் ஆகியவற்றின் ஆலோசனைகளைத் தொடர்ந்து இதன் மூலம் துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளைக் கண்டறிய 6ME மேம்படுத்தப்படும்.

இனி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6ME சோதனையில் BMI பரிசோதனை, சந்தேகத்திற்கிடமான மற்றும் விவரிக்கப்படாத காயங்களின் அறிகுறிகளை சரிபார்ப்பது, முதலாளிகள் இல்லாமல் கிளினிக்குகளில் 6ME சேவைகளை நடத்துதல். அனைத்து 6ME படிவங்களையும் MOM க்கு சமர்ப்பிக்க கட்டாயமாக்குவது போன்ற பல முன்னெடுப்புகளை MOM செய்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts