TamilSaaga

“வெளிநாட்டினருக்கு மிகவும் பாதுகாப்பான நாடு” : உலக அளவில் நம்ம சிங்கப்பூருக்கு 5வது இடம் – பெருமைப்பட வைக்கும் William Russell ரிப்போர்ட்

உலக அளவில் வெளிநாட்டினர் தாங்கள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பாக கருதும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது நமது சிங்கப்பூர். William Russell என்ற புகழ் பெற்ற Blogger இணையத்தில் தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் “குற்றச்செயல்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும், குறிப்பாக துப்பாக்கிகளை பயன்படுத்த அதிக அளவில் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றும் WR கூறுகின்றது. இதனால் தான் அங்கு வசிப்பது மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று வெளிநாட்டினர் கருதுவதாக William Russell கூறியுள்ளது.

சிங்கப்பூர் குறித்த சில சுவையான மற்றும் தேவையான தகவல்களையும் அந்த இணையதளத்தில் காணலாம்.

சரி சிங்கப்பூர் வெளிநாட்டவருக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்று கூற, William Russell முன்வைக்கும் இன்னும் பல முக்கிய காரணிகளை தற்போது காணலாம்.

ஏமாற்றி ஊருக்கு வர வைத்த பெற்றோர்… காதலை விட்டுக் கொடுத்து சிங்கப்பூரை விட்டே வெளியேறிய “வலிமை” பெண் – இந்த நொடி வரை தேடும் வெளிநாட்டு ஊழியர்

பொது சுகாதாரம்

சிங்கப்பூரில் உள்ள ஹெல்த்கேர்கள் தொடர்ந்து உலகிலேயே சிறந்த தரவரிசையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு உலகளாவிய அமைப்பு மற்றும் தனியார் சுகாதார சேவையை வழங்குகிறது, மேலும் உலக அளவில் சிங்கப்பூரில் தான் Life expectancy என்று கூறப்படும் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளதாம்.

சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு

தென்கிழக்கு ஆசியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர், துறைமுகம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

சிங்கப்பூரில் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு (Personal Safety)

மிகக் குறைந்த குற்ற விகிதம் நமது சிங்கப்பூரின் மிகசிறந்த ஈர்ப்புகளில் ஒன்றாகும், உண்மையில் இது உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று தான் என்கிறது William Russell. வன்முறை குற்றங்கள் இங்கு அரிதானது, குறிப்பாக துப்பாக்கிகள் இங்கு கட்டுப்படுத்தப்படுகின்றன.

டிஜிட்டல் பாதுகாப்பு

பாதுகாப்பான நகரங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது, அண்மைக்காலமாக டிஜிட்டல் முறையிலான குற்றங்கள் சிங்கப்பூரில் சற்று அதிகரித்திருந்தாலும் இன்னும் இது டிஜிட்டல் முறையில் பாதுகாப்பான நகரம் என்றே கூறலாம்.

சுற்றுசூழல் பாதுகாப்பு

சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030, நிலையான அதன் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த திட்டம். Green Plan 2030ன் ஒரு அங்கமாக உள்ளது தான் 1 மில்லியன் புதிய மரங்களை நடுவதும், 2030ல் நிலப்பரப்புக்கு அனுப்பப்படும் கழிவுகளை 30% குறைப்பதும் ஆகும்.

சக பெண் ஊழியரை பின்னால் தட்டிவிட்டு “கூலாக பதில்” சொன்ன Flight Attendant – அதைவிட கூலாக “தலையில் தட்டி” உள்ளே போட்ட சிங்கப்பூர் நீதிமன்றம்

மேற்குறிப்பிட்ட இந்த தரநிலைகள் மூலம் தான் சிங்கப்பூருக்கு William Russell 5வது இடம் அளித்துள்ளது. வெளிநாட்டவர் தாங்கள் பாதுகாப்பாக வாழ்வதாக உணரும் நாடுகளில் பட்டியலில் முறையே Denmark, Iceland, Canada, Japan ஆகிய நாடுகள் உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts