TamilSaaga

Agents-களிடம் போகாமல் சிங்கப்பூருக்கான ‘S Pass’ அப்ளை செய்வது எப்படி? சிம்பிள் வழி இதோ!

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகளையும் ஊதியத்தையும் வாரி வழங்கும் சிங்கப்பூரில் பணியாற்றுவது பெரும்பாலானோரின் கனவாகவே இருக்கும். அப்படி சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும்போது ஏஜெண்டுகள்கிட்ட போகாம `S Pass’ அப்ளை பண்ணுவது எப்படி?

சிங்கப்பூர்

உலகின் மிகப்பெரிய ஓப்பன் மார்க்கெட்டான சிங்கப்பூர், அதன் அமைவிடம் காரணமாக வர்த்தகத் துறையில் முக்கியமான நாடாக இருக்கிறது. அந்நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக சீனா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு பெருமளவில் வேலை பார்த்து வருகிறார்கள். அப்படி, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர நினைப்பவர்களுக்கு Work Permit பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. வேலை, திறன் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கு வழங்கப்படும் விசா வகை வேறுபடும். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர நினைப்பவர்கள் `S Pass’ மூலம் வரவே அதிகம் விரும்புவார்கள். அதற்கு என்ன காரணம்?

S Pass

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல நினைப்பவர்கள் ‘S Pass’-இல் போக வேண்டும் என நினைப்பதற்குக் காரணம், ஊதியம் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்கள். நீங்கள் இந்த வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தால், உங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக 3,500 சிங் டாலர்கள் வரை கொடுக்க வேண்டும். அதேபோல், வேலை பார்க்கும் நிறுவனம் சார்பில் காப்பீடு உள்ளிட்ட பல வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். இதனாலேயே, பாதுகாப்பான `S Pass’ Work Permit மூலம் சிங்கப்பூர் வர பெரும்பாலான வெளிநாட்டவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த Work Permit பெற ஒருவர் குறைந்தது 3 ஆண்டுகள் டிப்ளமோ அல்லது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 10 அல்லது 12-ம் வரை படித்திருப்பவர்கள் இந்த பாஸுக்கு அப்ளை செய்ய முடியாது. அதேபோல், சேவை துறையைப் பொறுத்தவரை, தங்கள் நிறுவனத்தின் மொத்த பணியாட்களில் 13% மற்றும் மற்ற உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், மொத்த வொர்க் ஃபோர்ஸில் 20% அளவுக்கும் `S Pass’ பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும்.

ஏஜெண்டுகள்கிட்ட போகாமல் ‘S Pass’ பெறுவது எப்படி?

பொதுவாக சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள், ஏஜெண்டுகள் மூலமே அதிக அளவில் வருகிறார்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் நடத்துக்கும் நேர்காணலுக்கு உங்களை அனுப்பி வைப்பார்கள். அதில், நீங்கள் செலக்ட் ஆனால், ஏஜெண்டிடம் பணம் கொடுத்தது போல, ஒரு தொகையை மீண்டும் கட்ட வேண்டி வரும். இது லட்சங்களில் இருக்கும். இப்படி ஏஜெண்டுகளை நாடாமல் நீங்கள் நேரடியாக ‘S Pass’-க்கு விண்ணப்பிக்க முடியுமா?

சிங்கப்பூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களே, தங்கள் பணியாளர்களுக்கு இந்த விசா வேண்டும் என்று விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதேநேரம், ஆன்லைனில் வேலை பற்றி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிறுவனங்களை ஏஜெண்டுகள் இல்லாமல், நேரடியாகவே தொடர்புகொண்டு விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கும் துறையில் ஒரு வேலைவாய்ப்பு இருப்பதாக ஒரு நிறுவனம் வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு உங்கள் ‘Resume’-ஐ அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதன்பின்னர், அந்த நிறுவனம் சார்பில் நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு வெற்றிபெற்றீர்கள் என்றால், முதற்கட்டமாக உங்களுக்கு ‘IPA’ எனப்படும் ‘In-principle approval’ மெயில் வழியாக உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த IPA-வை வைத்துக் கொண்டு நீங்கள் சிங்கப்பூர் வரலாம். அதன்பிறகு, அது ‘S Pass’-ஆக அங்கீகரிக்கப்படும். சிங்கப்பூரில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி ஆன்லைன்Job Portal’ இணையதளங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடியும். ‘Jobstreet.com.sg’ போன்ற இணையதளங்கள் இப்படியான சேவையில் முன்னணியில் இருப்பவை.

கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

உங்களின் ரெஸ்யூமை நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தைக் கவரும் வகையில் சிம்பிளாக ரெடி பண்ணி அனுப்புங்கள். அதேபோல், இன்டர்வியூவில் செலெக்ட் ஆகும்பட்சத்தில், அந்த நிறுவனம் பற்றின் ஆன்லைன், சோசியல் மீடியாவில் அலசி, அவை பற்றி எல்லா தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். சரியான நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்துவிட்டால், பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று பொருள். அதன்பிறகு, அவர்கள் அனுப்பும் ‘IPA’ பற்றி ஆன்லைனில் செக் செய்துகொள்ளுங்கள். சிங்கப்பூரின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வெப்சைட்டான https://mom.gov.sg/ -இல் இதை நீங்கள் செக் செய்துகொள்ள முடியும். சிங்கப்பூருக்கு வந்தபிறகு புராசஸிங் கட்டணமாக நூறு டாலர்கள் வரை செலவாகலாம். அது முடிந்தபிறகு உங்களுக்கான வொர்க் பெர்மிட் உங்கள் கைகளில் வந்து சேரும். இப்படி, நேரடியாக நிறுவனங்களைத் தொடர்புகொண்டு சிங்கப்பூருக்கு வேலைக்காக வரும்போது, உங்களுக்கான செலவும் குறையும். அதேநேரம், ஒவ்வொரு ஸ்டெப்பிலும் கவனமாகச் செயல்படுங்கள்… வாழ்த்துகள்!

Related posts