TamilSaaga

சிங்கப்பூரில் தொடர்ந்து பரவும் தொற்று : மீண்டும் உணவகங்களில் அமலாகும் கட்டுப்பாடு – முழு விவரம்

சிங்கப்பூரில் உள்ளூர் பெருந்தொற்று வழக்குகள் அதிகரித்து வருவதால், தினசரி நோய்த்தொற்றுகள் தற்போதைய விகிதத்தில் அதிகரிப்பதைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். சுகாதார அமைச்சகம் (MOH) நோய்த்தொற்று விகிதம் அதன் தற்போதைய பாதையில் தொடர்ந்தால், சிங்கப்பூர் அடுத்த வாரத்தில் தினசரியாக சுமார் 3,200 வழக்குகளை காணும் என்று எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

அதே சமயம் சிங்கப்பூர் அதிக எச்சரிக்கை நிலைக்குத் திரும்ப வேண்டியதில்லை என்று MOH கூறியிருந்தாலும், சுகாதாரத் திறன் மீதான அழுத்தத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை அடுத்த திங்கள் முதல் அக்டோபர் 24 வரை சுமார் ஒரு மாதம் கடுமையாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சமூகக் கூட்டங்களுக்கான குழு அளவுகள் ஐந்து முதல் இரண்டாக குறைக்கப்பட்டது.

பேரக்குழந்தைகள், தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படுவதைத் தவிர்த்து, ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளைக்கு பெறக்கூடிய தனிப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு (இரண்டு) இது பொருந்தும். உணவகங்களில் ழுமையாக தடுப்பூசி போடப்பட்டால் இரண்டு பேர் கொண்ட குழுக்கள் வரை வழக்கமான உணவு மற்றும் பான நிறுவனங்களில் சாப்பிட அனுமதிக்கப்படும்.

மேலும் அண்மையில் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் செல்லுபடியாகும் பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழை அளித்து உணவு உண்ணலாம்.

Related posts