TamilSaaga

சிங்கப்பூரில் சிக்கிய Interpol தேடிவந்த குற்றவாளி – இன்று தாயகம் அனுப்பிவைக்கப்பட்டார்

அனைத்துலக குற்றவியல் காவல்துறை அமைப்பு என்று அழைக்கப்படும் Interpol அமைப்பினால் தேடப்பட்டு வருபவர்களின் பட்டியலிலுள்ள இந்தோனேசியா நாட்டை சேர்ந்த ஆடவர் அடேலின் லிஸ் (Adelin Lis) இன்று சிங்கப்பூரில் இருந்து அவருடைய நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து அவரை ஊழல் மற்றும் சட்டவிரோதமாக மர வர்த்தகம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தோனேசிய அரசு தேடி வருவதாக Antara செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2006ஆம் ஆண்டு பீஜிங் நாட்டில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது அவரும் அவருடைய மெய்க்காப்பாளரும் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் காவல்துறை உதவியோடு அடேலின் லிஸ் அதன் பின்னர் கைது செய்யப்பட்டார். மீண்டும் 2008ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பியவர், 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிடிபட்டார். கடந்த ஜூன் 9ஆம் தேதி குடிநுழைவு குற்றங்களுக்காக சிங்கப்பூர் அரசு அவருக்கு சுமார் 14 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவருடைய அடையாளத்தை உறுதி செய்ய கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து இந்தோனேஷியா அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச்சில் தான் இந்தோனேசிய அதிகாரிகள் அதற்கு பதிலளித்து உள்ளதாகவும் ஆணையம் கூறுகிறது. இந்நிலையில் மீண்டும் சிங்கப்பூரிலிருந்து இந்தோனேஷியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் அடேலின் லிஸ்.

Related posts