TamilSaaga

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவமனைகள் – தொடர்ந்து அசத்தும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாடுகளிலிருந்து வந்த சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்று சிறப்பாக வட்டார அளவில் சுமார் 6 புதிய மருத்துவ நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக மனிதவள அமைச்சக செய்தி வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை மருத்துவ பராமரிப்பு, மேலும் நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை மற்றும் X-Ray போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

பிற நாடுகளிலிருந்து வந்து சிங்கப்பூரில் பணி செய்யும் ஊழியர்களுக்கு உதவும் நோக்கத்தில் அவர்களது நாடுகளிலிருந்தே சுகாதார ஊழியர்கள் பணியமரத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதன் மூலம் மொழி மற்றும் கலாச்சார பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மருத்துவ நிலையங்களில் ஊழியர்கள் சிகிச்சை பெற முடியும் என்று மனிதவள அமைச்சகம் கூறுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டு ஊழியர்களுக்கு என்று சிறப்பாக சிங்கப்பூரில் வட்டார அளவில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்ட கால திட்டத்தை மனதில் கொண்டு புதிய மருத்துவ நிலையங்கள் திறக்கப்படுவதாகவும். அதன் மூலம் ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு வேலை அளிக்கும் முதலாளிகள் மற்றும் அரசாங்கம் ஆகிய அனைத்து தரப்புகளுக்கும் செலவு குறையும் என்று மனிதவள அமைச்சர் தான் சி லெங் தெரிவித்தார்

Related posts