TamilSaaga

‘அதிவேக வளர்ச்சியில் சிங்கப்பூர் ஏற்றுமதி’ – கடந்த ஜூன் மாதத்தில் 15.9 சதவிகிதம் வளர்ச்சி

சிங்கப்பூரில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 15.9 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் Semi-Conductors தொடர்பான பொருட்களுக்கு தேவை அதிகரித்திருப்பதாலும் சிறப்பு இயந்திரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற மின்னணு அல்லாத ஏற்றுமதிகள் அதிகரிப்பால் இது சாத்தியமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வளர்ச்சி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மிகப்பெரிய விரிவாக்கத்தை குறிப்பதாக உள்ளது, மேலும் NODX கடந்த மே மாதத்தில் 8.6 சதவீத வளர்ச்சியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. ESP எனப்படும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த விரிவாக்கம் என்பது குறைந்த அளவில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

தனிநபர் கணினிகள், integrated circuits, diodes மற்றும் transistors முறையே 130.2 சதவீதம், 14.9 சதவீதம் மற்றும் 32.2 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மின்னணு ஏற்றுமதி என்பது கடந்த ஜூன் மாதத்தில் 25.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது சிறந்த வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சிங்கப்பூரின் பொருளாதாரக் வளர்ச்சி என்பது நாட்டில் கொரோனா பரவலை பொறுத்ததே என்றும், தொற்று தொடர்பான மேலும் புதிய கிளஸ்டர்கள் உருவாகி வருவதால் அது சில வருத்தத்தை ஏற்படுத்துவதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts