கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரின் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதிகள் (NODX) அக்டோபரில் ஆண்டுக்கு ஆண்டு 17.9 சதவீதம் உயர்ந்துள்ளது, இது கடந்த அக்டோபர் 2017-க்குப் பிறகு மிக விரைவான வேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து 11 மாதங்களாக ஏறுமுகத்தில் இருப்பதும் நினைவுகூரத்தக்கது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ESG) இன்று புதன்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட தரவுகளின்படி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லாத ஏற்றுமதி என்று இரண்டும் வளர்ச்சி பெற்றுள்ளது.
முந்தைய மாதத்தின் 1 சதவீத அதிகரிப்பைத் தொடர்ந்து, NODX அக்டோபரில் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னணு ஏற்றுமதிகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, அக்டோபரில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 14.9 அதிகரிப்பைப் பதிவுசெய்ததுள்ளது. முதன்மையாக ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் “உலகளாவிய செமிகண்டக்டர் தேவை” ஆகியவற்றால் இந்த வளர்ச்சி இயக்கப்படுகிறது என்று ESG தெரிவித்துள்ளது.
நாணயம் அல்லாத தங்கம், பிரத்யேக இயந்திரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் ஆகியவற்றின் மூலம் அக்டோபர் மாதத்தில் எலக்ட்ரானிக் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 18.9 சதவீதம் அதிகரித்துள்ளது. “அக்டோபர் 2021ல் NODX மிக அதிகமாக உயர்ந்துள்ளது,” என்று ESG கூறியது, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் ஹாங்காங்கிற்கான ஏற்றுமதி குறைந்தாலும் இந்த உச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிகரிப்புக்கு சீனா, மலேசியா மற்றும் தைவான் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளன.
நாணயம் அல்லாத தங்கம், சிறப்பு இயந்திரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் காரணமாக சீனாவுக்கான ஏற்றுமதி 35.6 சதவீதம் அதிகரித்துள்ளது. Integrated Circuits, சிறப்பு இயந்திரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் காரணமாக தைவானுக்கான ஏற்றுமதி 32.7 சதவீதம் அதிகரித்துள்ளது.