சிங்கப்பூரில் வழக்கம்போல தனது காலை பணிகளை துவங்க ஆயத்தமான ஒருவருக்கு ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அவரும் அதை எடுக்க, “சிங்கப்பூர் போலீஸ் படை” என்ற வாசகத்துடன் நீல நிற பின்னணியில் தோன்றினார் ஒரு நபர். “சிங்கப்பூர் காவல் படையிலிருந்து CID துறையின் அதிகாரி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அந்த ஆசாமி. CID என்பது பிற நாடுகளை போலவே சிங்கப்பூரில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் கடந்த செப்டம்பரில் அதிகபட்சமாக 98,700 வேலை காலியிடங்கள் உள்ளன”
இருப்பினும், இந்த மோசடி செய்பவர் போலீஸ் சீருடையில் இல்லாமல், வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் பிளேஸர் அணிந்து மிகவும் நேரிதியாகவே காட்சியளித்தார். இந்த வீடியோ கால் அழைப்பை முற்றிலும் TikTok செயலியில் அந்த நபர் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த TikTok பயனர், பாகிஸ்தானின் நாட்டுக் குறியீடான +92 எனத் தொடங்கும் எண்ணிலிருந்து “Whatsapp” வீடியோ அழைப்பைப் பெற்றதாக தனது பதிவில் கூறியுள்ளார்.
அந்த வீடியோ அழைப்பில் பேசிய நபர் “குறிப்பிட்ட அந்த சிங்கப்பூர் நபரின் NRIC விவரங்களை வங்கியில் புதுப்பிக்காததால் அவரது டெபிட் கார்டு நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதுவரை சௌகர்யமாக படுக்கையில் படுத்துக்கொண்டே பேசிய அந்த சிங்கப்பூர் நபர் தனது படுக்கையில் இருந்து எழுந்து, பலமாக சிரித்தார். அந்த ஆசாமி போலியான அதிகாரி என்று உணர்ந்து, தான் மொத்தம் நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதாகவும், அதில் நீங்கள் எந்த வங்கியை குறித்து கேட்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார். இருப்பினும், மோசடி செய்பவர் அவரது கேள்விக்கு பதில் அளிக்காமல் NRIC ஐ முதலில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரும் சரி என்று கூறி, ஆமாம் உங்கள் பெயர் என்ன என்று கேட்க, அந்த ஆசாமி “ஜான் மைக்கெல் சார்” என்று கூறி. இதோ என்னுடைய NRICஐ காட்டுகிறேன் என்று கூறி தனது நடுவிரலை காட்டியுள்ளார். இறுதியில் நீங்கள் மோசடி என்று எனக்கு தெரியுமென கூறி அந்த அழைப்பை துண்டித்துள்ளார்.