TamilSaaga

“உலகில் எந்த நாடுமே யோசிக்காத முதல் முயற்சி”.. பறக்கும் தீயணைப்பு வாகனமாக மாறும் போயிங் 757″ : சிங்கப்பூர் Engineering துறையில் புதிய புரட்சி

சிங்கப்பூரின் ST இன்ஜினியரிங் நிறுவனம் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 16) போயிங் 757 பயணிகள் விமானத்தை வான்வழி தீயணைப்புத் தளமாக மாற்றப் போவதாகக் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு செயல்படுத்தப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. காட்டில் பரவும் தீயை அணைக்க அமெரிக்க வனத்துறையால் ஒப்பந்தம் செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனமான கேலக்டிக் ஹோல்டிங்ஸ் இந்த விமானத்தை வாங்கவுள்ளது.

“பிறந்தது விடிவு காலம்”.. VTL நடைமுறைகளை எளிதாக்கும் சிங்கப்பூரின் “அதிகாரப்பூர்வ” அறிவிப்பு – சரியான நேரத்தில் அரசு எடுத்த கச்சிதமான முடிவு

மேலும் இந்த விமானத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் தரநிலை சான்றிதழ் உள்ளிட்ட முழு வேலைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று சிங்கப்பூர் ஏர்ஷோவில் கையெழுத்திடும் விழாவின் போது ST இன்ஜினியரிங் கூறியது. Boeing 757 passenger-to-tanker (P2T) விமானம், வரும் 2024ல் செயல்பாட்டுக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 26,500 லிட்டர் தீ தடுப்பு திறன் கொண்டதாக இந்த விமானம் செயல்படும். இது சந்தையில் தற்போது உள்ள மிகப்பெரிய வான்வழி தீயணைப்பு தளங்களில் ஒன்றாகும் என்று ST இன்ஜினியரிங் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

போயிங் 747 சூப்பர் டேங்கர் மற்றும் மெக்டொனெல் டக்ளஸ் டிசி-10 போன்ற தற்போதைய Upgrade செய்யப்பட்ட தீயணைப்பு விமானங்கள் அதிக திறன் கொண்டது என்றபோது அவை தற்போது பழமையான ஒன்றாக மாறிவருகின்றன. உலக அளவில் தற்போது காட்டுத் தீ அதிக அளவில் பரவி வரும் நிலையில் Boeing 757 passenger-to-tanker (P2T) விமானம் ஒரு தன்னிகரற்ற “State of the Art” விமானம் என்று ST கூறியது. சேவையில் இருக்கும் தற்போதைய தலைமுறை தீயணைப்பு விமானங்களுடன் ஒப்பிடும்போது, ​​போயிங் 7572T அதிக எரிபொருள் திறன் கொண்டது, தீயணைக்கும் பணிகளுக்காக தொலைதூர இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு பல்துறை திறன் இதற்கு உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ST இன்ஜினியரிங் நிறுவனத்தின் ஏர்ஃப்ரேம் பராமரிப்பு மற்றும் மாற்றியமைக்கும் நிலையம் ஒன்றில் விமானம் Upgrade செய்யப்படும். ST இன்ஜினியரிங் மூத்த திட்ட மேலாளர் லியோன் டான் கூறுகையில், ST நிறுவனம் விமானத்தின் இருக்கைகளை அகற்றி, அதன் ஜன்னல்களை சேர்க்கும் மற்றும் கேபினில் இரண்டு தீ தடுப்பு தொட்டிகளை நிறுவும் என்று கூறினார். விமானத்தின் வயிற்று பகுதியில் உள்ள முன் மற்றும் பின் Exit கதவுகள் வழியாக ரிடார்டன்ட் வெளியிடுவதற்காக தொட்டிகளின் கீழ் தளம் வலுவூட்டப்பட்டு சேனல்கள் அமைக்கப்படும்.

சிங்கப்பூரில் இனி 7 நாட்களுக்கு பதில் 5 நாட்கள் மட்டுமே – “நிம்மதி பெருமூச்சு” விட வைத்த MOH-ன் Latest அறிவிப்பு

இதுஒருபுரம் இருக்க இந்த விமானத்திற்கு சான்றிதழைப் பெறுவது தான் முக்கிய சவால்களில் ஒன்று என்று திரு டான் கூறினார். “உண்மையில் மிகக் குறைந்த அளவிலான விமானங்கள் (தீயணைப்பு நடவடிக்கைகளை நடத்துவது) துணை வகை சான்றிதழின் கீழ் சான்றளிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார். இந்த விமானங்களை எங்கு, எப்படி பயன்படுத்த விரும்புகிறது என்பதைப் பொறுத்து ST இன்ஜினியரிங் நிறுவனம் 10 முதல் 15 விமானங்களை கேலக்டிக் ஹோல்டிங்ஸுக்கு மாற்றியமைக்க உள்ளது என்று திரு டான் கூறினார். இந்த விமானங்கள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts