TamilSaaga

“ஏர் கண்டிஷனிங் யூனிட்களில் 1500-க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் Cartons” – சிங்கப்பூரில், சீன நாட்டவர் கைது

சிங்கப்பூரில் ஆறு ஏர் கண்டிஷனிங் யூனிட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் கார்டன்கள் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகளால் கடந்த டிசம்பர் 8ம் தேதி அன்று கைப்பற்றப்பட்டன. செம்பவாங்கில் உள்ள காம்பாஸ் கிரசண்ட் அருகே நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : இனி Ticket Date Change மற்றும் Re-fund உண்டு

கடந்த டிசம்பர் 8ம் தேதி சுங்க அதிகாரிகள், சீன நாட்டவர் ஒருவர் ஒரு கிடங்கில் இருந்து பொருட்களை சேகரித்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டிரக்கில் ஏற்றுவதைக் கவனித்தனர். அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு உடனடியாக விரைந்த நிலையில் குளிரூட்டும் அலகுகளில் சுமார் 1,512 கார்டன்கள் அளவில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கார்டன்கள் சீனாவில் இருந்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையில் மற்றொரு அட்டைப்பெட்டி மற்றும் ஒன்பது பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அந்த நபரின் வீட்டில் தொடர்ந்து சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட இந்த பொருட்களின் வரி ஏய்ப்பு $129,280 மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) $10,370 ஏய்ப்பு ஆகும். சிகரெட் பாக்கெட்டுகள், அட்டைப்பெட்டிகள், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து வருவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குவது, விற்பது, அனுப்புவது, டெலிவரி செய்வது அல்லது சேமித்து வைப்பது ஆகியவை சுங்கச் சட்டம் மற்றும் GST சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்கள் என்று சுங்கத்துறை எச்சரித்துள்ளது. குற்றவாளிகளுக்கு வரியின் அளவில் 40 மடங்கு வரை அபராதம் மற்றும், ஆறு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதுபோன்ற குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என ஏஜென்சி மேலும் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts