TamilSaaga

சிங்கப்பூர் செல்ல “Entry Approval” தேவையா? இல்லையா?.. உண்மை புரியாமல் முன்பதிவு செய்து ஏர்போர்ட்டில் குவிந்த பயணிகள் – பணம் திரும்ப கிடைக்காததால் ஆத்திரம்

சுமார் 2 ஆண்டுகள் பெரும் போராட்டத்திற்கு பிறகு அண்மைக்காலமாக உலக அளவில் தொற்றின் அளவு குறைந்து வருகின்றது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் உலக அளவில் பல நாடுகள் தங்கள் எல்லைகளை தளர்த்தி வருவதுபோல கடந்த மார்ச் 24ம் தேதி சிங்கப்பூரின் பெருந்தொற்று நிலை குறித்து பேசிய நமது பிரதமர் லீ சில முக்கிய தளர்வுகள் குறித்த அறிக்கைகளை வெளியிட்டார்.

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்” : மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் “சலுகை” – MOM மற்றும் MND கூட்டறிக்கை

அதில், இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மார்ச் 31 அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தாலே இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்றும் இனி அவர்கள் Entry Approval பெறவேண்டிய அவசியம் இருக்காது (தனிமைப்படுத்துதலும் இல்லை). என்றும் அறிவித்தார்.

மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டியதில்லை. தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது என்றும், Entry Approval இனி அவசியமில்லை என்றும் பிரதமர் அறிவித்தார்.

Entry Approval தேவையா? இல்லையா?

பிரதமரே அறிவித்துவிட்டார், இனி என்ன Entry Approval தேவையா? இல்லையா? என்ற கேள்வி என்று நீங்கள் கேட்பது சரிதான். இந்நிலையில் இதுகுறித்து முழுமையான விவரங்களை பெறலாம் என்று விமான டிக்கெட் முன்பதிவுத் துறையில் பல வருடங்கள் அனுபவமுள்ள திருச்சி நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனரை நமது தமிழ் சாகா குழு அணுகியது. அவர் அளித்த தகவலின்படி “சிங்கப்பூர் அரசு Entry Approval குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டாலும், இன்னும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விதிமுறைகள் குறித்து எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை” என்று கூறுகின்றார் அவர்.

“அதுமட்டுமல்லாமல் முதலில் சிங்கப்பூர் அரசு அறிவித்த இந்த புதிய விதி வரும் ஏப்ரல்.1ம் தேதியில் இருந்து தான் அமலுக்கு வருகிறது”. “தயவு செய்து மக்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும், அரசு சொன்ன விதி இன்னும் நடப்புக்கே வராத நிலையில், Entry Approval இல்லாமல் டிக்கெட் புக் செய்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து பயணிக்க முடியாமல் இறுதியில் பயணிகளுக்கு பணவிரையத்தை ஏற்படுத்துகிறது. இப்படி புக் செய்த டிக்கெட்களுக்கு Refund கிடைக்காததால் சில ஆத்திரம்கொள்ள விமான நிலையத்தில் சில சலசலப்புகளும் ஏற்படுகிறது என்றார் நந்தனா உரிமையாளர்.

ICA சொல்வதென்ன?

இந்த விஷயத்தில் மேலும் தகவல்களை பெற நமது தமிழ் சாகா சார்பாக நந்தனா உரிமையாளர் சிங்கப்பூர் ICA அதிகாரிகளை தொடர்புகொண்டபோது அவர்கள் அளித்த தகவல் உச்சபட்ச குழப்பத்தை ஏற்படுத்தியள்ளது என்று தான் கூறவேண்டும்.

“சிங்கப்பூரில் நீல நிறத்தில் மின்னும் கடல் அலை.. Changi கடற்கரையில் திடீரென கூடிய மக்கள் கூட்டம்” – Loyang வரை நீடித்த Traffic Jam

ICA அளித்த பதில் : “Live Visa”, அதாவது தற்போது செல்லுபடியாகும் Live விசா வைத்திருப்பவர்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு Entry Approval பெறாமல் சிங்கப்பூருக்குள் நுழையலாம். ஆனால் அதே சமயம் புதிதாக VISA Apply செய்பவர்கள் நிச்சயம் Entry Approval பெற்று மட்டுமே சிங்கவருக்குள் நுழையமுடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆகையால் பிரதமர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்த அந்த தளர்வுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கான அந்த Entry Approval கடும் குழம்பும் நிறைந்ததாகவே உள்ளது என்று தான் கூறவேண்டும்.

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts