TamilSaaga

“சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பார்” : பிரதர் லீ அறிவிப்பு – நாட்டிற்காக அரும்பாடுபடுவேன் என்று வோங் சூளுரை!

சிங்கப்பூரில் திரு. லாரன்ஸ் வோங்கின் துணைத் தலைவர் யார் என்பது குறித்து அவர் பின்னர் முடிவு செய்வார் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (PAP) நான்காம் தலைமுறை (4G) குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்தானாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் லீ இதை தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் PAP ஆட்சிக்கு வந்தால் திரு. வோங் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக இருப்பார் என்றும் பிரதமர் லீ கூறினார். தற்போதைய துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் கடந்த 2018ல் 4G குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​அவர் அப்போதைய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங்கைத் தனக்கு துணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் தனது பதவியில் இருந்து ஹெங் அவர்கள் விளக்கியுள்ளார். பிரதம மந்திரியின் துணை தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு, பிரதமர் லீ, கட்சி இதைப் பற்றி வெவ்வேறு வழிகளில் ஆராய்ந்து வருகின்றது என்று கூறினார்.

சிங்கப்பூர்.. மனம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்படும் பொது ஊழியர்கள்.. ஏன்? மனம் திறந்த “ஆம்புலன்ஸ் பணியாளர் சிவச்சந்திரன்” – இனவெறி தான் காரணமா?

செய்தியாளர் சந்திப்பின் போது, ​​4G குழு எவ்வாறு இணைந்து செயல்படுகிறது, குறிப்பாக கடந்த ஆண்டில் அதன் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது குறித்து திரு. வோங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வோங், “அணியில் உள்ள அனைவரும் தங்களுக்கென தனித்துவமான திறன்களை கொண்டு செயல்படுவதாக அவர் கூறினார்”.

“எனவே கூட்டாக, எங்களிடம் ஒரு வலுவான குழு உள்ளது, மேலும் அணியை வலுப்படுத்துவதில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.எது எப்படி இருந்தாலும் நமது வெற்றி என்பது இறுதியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதைப் பற்றியது” என்று வோங் கூறினார்.

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான MWCare App.. எழுத்துப்பிழைகளோடு காணப்படும் “தமிழ் வழி சேவை” – உடனடி நடவடிக்கை எடுக்குமா “eclinic”?

அணியின் தலைவர் என்ற முறையில், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் கூறினார். “எனவே, என்னிடமிருந்தும் எனது குழுவினரிடமிருந்தும் சிங்கப்பூரர்கள் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் – கூட்டாக, நாங்கள் எப்போதும் எங்கள் மக்களுக்கும் நம் நாட்டிற்கும் எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று நமது எதிர்கால பிரதமர் வோங் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts