TamilSaaga

சிங்கப்பூர் – பெங்களூர் : வாரம் ஒருமுறை இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளும் தங்களுடைய எல்லைகளை குறைவான நாடுகளுக்கே திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிற நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு மக்களை உலகின் பல நாடுகளும் பல திட்டங்களை அறிமுகம் செய்து மீண்டும் தாயகம் அழைத்து வருகின்றது. அந்த வகையில் அண்டை நாடான இந்தியா வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களை நாடுகள் கடந்து பயணிக்க வழிவகை செய்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பிற விமான சேவைகள் இல்லாத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூர் செல்கின்றது.

இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து வாரம் ஒருமுறை ஒரு சிறப்பு விமானம் இயக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு செல்கின்றது. இதற்கான முன்பதிவை அதிகபுர்வ ஏஜெண்டுகள் அல்லது ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts