சிங்கப்பூருக்கு Badminton போட்டிகளில் நமது நாட்டிற்கு ஒரு “இரட்டை தமாக்கா” கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் சிறந்த Badminton வீரர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சிங்கப்பூரின் லோ கீன் யூ ஒற்றையர் போட்டியில் பட்டத்தை வென்றுள்ளார் இறுதிப்போட்டியில் அவர் இந்தியாவின் லக்ஷ்யா சென்-வை 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதேபோல லோவின் மூத்த சகோதரர் கீன் ஹீன், இரட்டையர் போட்டியில் டெர்ரி ஹீயுடன் வெற்றிபெற்றபோது, நமது நாட்டிற்காக இரண்டாவது தங்கத்தை பெற்றார்.
நெதர்லாந்தில் நிகழ்த்திய இந்த சாதனைக்காக சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சர் எட்வின் டோங் அவர்களை வாழ்த்தினார். “கீன் யூ இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார், 21-12, 21-16 நேர் செட்களில் வெற்றி பெற்றார் என்று தனது முகநூல் பதிவில் அவர் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு கியான் யூவின் முதல் சுற்றுப்பயணமாக டச்சு ஓபன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.